நாம் எப்போதும் உணவுகளை உண்ணும் பொழுது மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பூஞ்சை படிந்த உணவுகள் அலர்ஜியை உருவாக்கலாம்.
குறிப்பாக பான் போன்ற உணவுகளில் படிந்திருக்கும் பூஞ்சைகளை கவனிக்காமல் நாம் சாப்பிட்டு விடுவோம்.
பூஞ்சை படர்ந்த பானானது அங்கு நடக்கும் வேதியியல் மாற்றங்களால் நிகழ்கிறது.
இது பெரிய அளவில் மனிதர்களைப் பாதிக்கவிட்டாலும் தொடர்ந்து அவற்றை உண்பது கண்டிப்பாக பாதிப்பினை ஏற்படுத்தும்.
இந்த மாதிரியான விரைவில் கெட்டுப் போகக் கூடிய உணவுகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பார்க்கலாம்.
குறிப்பாக, பிரெட், சீஸ், மாமிசம், காய்கறிகள் ஆகியவற்றை கவனமாக விரைவாக சாப்பிடுங்கள்.
பூஞ்சைகள் பாதிக்கப்படக்கூடிய உணவுகளில் பிரட் மாமிசம் ஆகியவற்றில் பூஞ்சைகள் உடல் முழுவதும் மிக விரைவாக பரவி விடும்.
இவ்வாறான உணவுகளை சாதாரணமாக வைப்பதை விட நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம்.
நீங்கள் கையால் தொட்டாலும் கொஞ்சமாக காற்று சுழற்சி அந்த பான் போன்ற உணவில் இருந்தாலோ சூடு இருக்கக்கூடிய பகுதியில் இருந்தாலும் மிக விரைவாக இந்த பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றன.
முதல் நாள் வாங்கிய பானை மறு நாளைக்கு உண்ண வேண்டும் என்று நினைத்து இருந்தீர்கள் என்றால் அவற்றினை ஃப்ரீசரில் வைத்து விடுவது இன்னும் சிறந்தது.
அது உங்கள் உணவினை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்.
பானை டோஸ்ட் செய்து க்ரீம், சீஸ் ஆகியவற்றை தடவி தாரளமாக சாப்பிடலாம்.
ப்ரட்டினை ஓவனில் ஆலிவ் ஆயில் தடவி சமைத்தும் சாப்பிடலாம்.
எனவே இப்பொழுது பிரட்டினை நீண்ட காலம் பாதுகாக்க தேவையான ஐடியாக்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும். ஒருவேளை தெரியாமல் பூஞ்சை படர்ந்த பானை சாப்பிட்டால் உடனே பயப்பட வேண்டாம்.
உங்கள் பதட்டம் மற்றும் பய மனநிலையைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அவை நீண்ட நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தான் பிரச்சனை ஏற்படும்.