29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 15 2
மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…தெரிஞ்சிக்கங்க…

கர்ப்ப காலம் என்றாலே பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் வேலை பார்க்கும் பெண்கள் என்றால் கர்ப்ப காலத்தில் கூட வேலையிடங்களில் சில மன அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மன அழுத்தத்தை எல்லாம் கைவிட்டு ரெம்ப கூலாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் தான் வேலைக்கு போகும் பெண்களுக்காக தங்கள் கர்ப்ப காலத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்காக இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கவனம்

கர்ப்ப காலத்தில் நீங்கள் வேலைக்கு போகும் நிலை இருந்தால் போகும் போது தண்ணீர் மற்றும் உங்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள். இதன் மூலம் உணவு அழற்சி மற்றும் சீரண பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

கொஞ்சம் வேலையிலிருந்து ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் உரையாடுவது, கொஞ்சம் தூரம் நடந்து செல்லுதல், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் உற்சாகத்தை திரும்ப பெறலாம்.

அமரும் போது நல்ல நிலையில் அமர்ந்து உட்காருங்கள். இது உங்கள் உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள உதவும். கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் பெற்று இருந்தால் காலை ஸ்டூல் அல்லது உயரமாக தூக்கி வைத்து இளைப்பாருங்கள்.

செய்யக்கூாதவை

மாடிப்படிகளில் தொடர்ந்து ஏறி உங்கள் ஆற்றலை செலவழிப்பதை தவிருங்கள். வேண்டும் என்றால் லிப்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

புகைபிடித்தல், காபி பானங்கள் போன்றவற்றை அறவே தவிர்த்திடுங்கள். ஏனெனில் நிக்கோட்டின் மற்றும் காஃபைன் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்யாதீர்கள். வண்டியில் போகும் போது அடிக்கடி குதிப்பதால் உங்கள் குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.

அடிக்கடி ஜூஸ்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை பானங்களை தவிர்த்திடுங்கள். நீர்ச்சத்து உங்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலியை கொஞ்சம் குறைக்கும். எனவே போதுமான நீர்ச்சத்து உங்களுக்கு மிகவும் முக்கியம்.

உடற்பயிற்சி

நீங்கள் வேலையில் புலியாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் கொஞ்சம் நிதானமாக வேலை பார்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் உங்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியை செய்யுங்கள். உங்களது இதயத் துடிப்பு கண்டிப்பாக 140 துடிப்புகள் /நிமிடம் அளவில் மட்டுமே இருக்க வேண்டும். அதனால் ரெம்ப கடினமான உடற்பயிற்சி கூடாது. நடைபயிற்சி மிகவும் நல்லது எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் காலார நடக்கலாம்.

எதிர்பார்ப்பு

நிறைய வேலைகளை இழுத்து போட்டு செய்யாதீர்கள். வேண்டும் என்றால் கர்ப்ப காலத்தில் உங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று கொஞ்சம் குறைவான பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பகுதி நேர வேலைக்கு கூட அனுமதி பெற்று கொள்ளுங்கள். உங்கள் வேலை கண்டிப்பாக கெமிக்கல் விளைவை ஏற்படுத்தும் வேலையாக இருக்கக் கூடாது.

உணவுப் பழக்கம்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். எந்த உணவுப் பொருளை யும் வாங்கும் போது அதன் காலாவதி தேதி பார்த்து வாங்குங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கும் போது பார்த்து கவனமாக வாங்குங்கள். அழுகினதாக இருக்கக் கூடாது.

கைகளையும், உணவுப் பாத்திரங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக கழுவி விட்டு பயன்படுத்துங்கள்.

சாப்பிடும் போதும் சரி, சமைக்கும் போதும் சரி கைகளை நன்றாக கழுவுங்கள். காய்கறிகளை நறுக்கும் போது கவனமாக இருங்கள். கைகளை வெட்டி தொற்றை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். வேலையிடங்களில் சாப்பிடுவதாக இருந்தால் சுத்தமான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

குமட்டல்

கர்ப்ப காலத்தில் பெண்கள் வாந்தி, குமட்டல் போன்றவற்றை சந்திப்பார்கள். குமட்டல் எதுவும் ஏற்பட்டால் மீட்டிங்கின் போது எளிதாக ரெஸ்ட் ரூமிற்கு எழுந்து செல்லுவதற்கு ஏதுவாக உட்கார்ந்து கொள்ளுங்கள். சுத்தமான துணி, துண்டு, மவுத் வாஷ் போன்றவற்றை எப்பொழுதும் உங்கள் கைகளிலே வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட உடன் உடனே வேலையை ஆரம்பிக்காமல் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுங்கள். காபி போன்ற சில உணவுகளின் வாசனை உங்களுக்கு வாந்தியை ஏற்படுத்தலாம். வேண்டும் என்றால் இஞ்சி டீ போன்றவற்றை பருகலாம்.

ஆடைகள்

கர்ப்ப காலத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கென்றே நிறைய ஆடைகள் உள்ளன. மென்மையான ஆடைகளை உடுத்துங்கள். ரெம்ப இறுக்கமான ஆடைகள் வேண்டாம். இல்லையென்றால் மூச்சு விட சிரமம் படுவீர்கள். காலணிகளும் உயரமாக இல்லாமல் கிடைமட்டமாக வாங்கி பயன்படுத்துங்கள். ஹீல்ஸ் போன்றவை வேண்டாம். ஏனெனில் கால் பிசங்குவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

ஓய்வு நேரம்

ரெம்ப களைப்பாக தென்பட்டால் ஓய்வெடுங்கள். அந்த மாதிரியான சமயங்களில் வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொள்வது கூட நல்லது. உடலை ரெம்ப வருத்த வேண்டாம்.

வாகனம் ஒட்டுதல்

கர்ப்ப காலத்தில் இருசக்கர வாகனம் போன்றவற்றை ஓட்ட நேர்ந்தால் கவனமாக கையாள்வது முக்கியம். முதுகு மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டும் போது பெல்ட் கூட போட்டு கொள்ளுங்கள். வயிற்றில் பெல்ட் மாட்டுவதை தவிர்த்து நெஞ்சில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ரெம்ப தூரம் வாகனத்தை ஓட்டிச் செல்லாமல் சிறுது தூரம் நடந்து செல்லுங்கள்.

பாதுகாப்பான வேலை சூழல்

நீங்கள் கெமிக்கல்கள் நிறைந்த தொழிற்சாலை போன்றவற்றில் வேலை பார்த்தால் உங்கள் கர்ப்ப காலத்தை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கையாக நடப்பது நல்லது. ரெம்ப நேரம் கெமிக்கல் சூழலில் நிற்காமல் உங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று வீட்டிலிருந்து வேலை பார்க்க முற்படலாம்.

உரிமையை தெரிந்து கொள்ளுங்கள்

கர்ப்ப காலப் பெண்களுக்கு ஏதுவாக வேலை சூழலை எளிதாக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது உரிமையை நன்றாக உணர்ந்து வைத்துக் கொண்டு செயல்படுங்கள். இது குறித்து உங்கள் மேலதிகாரியிடம் எந்த வித தயக்கமும் இல்லாமல் பேசுங்கள்.

உடலை வறுத்தாதீர்கள்

கர்ப்ப காலத்தில் வேலை பார்க்கும் போது உங்கள் உடலை வறுத்தி வேலை பார்க்க வேண்டாம். உங்கள் உடல் ஏற்றும் கொள்ளும் அளவிற்கு மட்டும் வேலை பாருங்கள். போதுமான நேரம் மட்டுமே வேலை பாருங்கள். கூடுதல் நேரம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வேலையிலிருந்து உங்கள் உடலுக்கு போதுமான இடைவெளி விடுங்கள்.

தண்ணீர் குடியுங்கள்

கர்ப்ப காலத்தில் உடலுக்கு போதுமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது உற்சாகமாக இருக்க உதவும். எனவே எப்பொழுதும் கையில் ஒரு வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இது மீட்டிங்கின் போது கூட உங்களுக்கு உதவும்.

சந்தோஷமாக வேலை பாருங்கள்

கர்ப்ப காலத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும் தவறு. உங்களால் முடிந்த சின்னஞ் சிறிய வேலைகளை செய்ய முற்படுங்கள். வேலைக்கு போவதை சந்தோஷமாக உணர்ந்தால் செல்லுங்கள். நண்பர்களுடன், சக ஊழியர்களுடன் பேசி சிரியுங்கள். சந்தோஷமாக மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்யுங்கள். உங்கள் கர்ப்ப காலமும் ஆரோக்கியமாக அமையும்.

Related posts

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…விட்டமின் டி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி பிடிக்காதா?

nathan

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

nathan

ஹெல்த் ஸ்பெஷல் இரத்த சோகைக்கு காரணம் வைட்டமின் குறைபாடுதான்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பெண்களின் மார்பகத்தில் பூப்படைவு முதல் தாய்ப்பால் அளிக்கும் வரை நிகழும் மாற்றங்கள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய்க்கான அபாயம் உள்ளதா என்பதை நொடியில் அறிய இங்க அழுத்துங்க…

nathan

உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா?

nathan