26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
poori
ஆரோக்கிய உணவு

சுடச்சுட பூரி செய்து சாப்பிடலாம்

ரவை என்றதுமே நம்மில் பலருக்கும் உப்புமா தான் நினைவில் வரும், ஆனால் ரவை-யை வைத்து மிக சிம்பிளாக பூரி செய்து சாப்பிடலாம் தெரியுமா?

இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு கூட்டு செய்தால் இன்னும் டேஸ்டியாக இருக்கும்.

இதற்கு கோதுமை மாவோ, மைதா மாவோ எதுவும் தேவையில்லை, வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ரவை – ¼ கிலோ
எண்ணெய் – தேவையான அளவு

உருளைக்கிழக்கு குருமா – செய்ய
உருளைக் கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
பட்டை, கிராம்பு, ஏலக்காய்- 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை
ரவையை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்த பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து கொள்ளுங்கள், பூரி செய்யும் பதத்திற்கு மாவு வந்த பின்னர் அப்படியே சிறிது நேரம் ஊறவைக்கவும்.

தொடர்ந்து சப்பாத்திக் கல்லில் தேய்த்து, சிறு சிறு பூரிகளாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு குருமா

கடாயை அடுப்பில் வைத்ததும், பட்டை கிராம்பு, ஏலக்காய் போட்டதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும், பின் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

தேவையானால் தேங்காய் துருவல் கூட சேர்த்துக் கொள்ளலாம், சுவையும் கூடுதலாக இருக்கும்.

ஏற்கனவே பொரித்து வைத்துள்ள பூரியுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் வாழ்நாளில் ரவை பூரியை மறக்கவே மாட்டீர்கள்!!!

Related posts

சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

nathan

கவா டீ என்றால் என்ன? இந்த டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றன

nathan

நல்லெண்ணெயை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் பானங்கள்!!!

nathan

சுவையான கோழி குருமா

nathan

அவசியம் படிக்க.. வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

nathan

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

nathan

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

nathan

நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் நார்ச்சத்து நிறைந்த சிவப்பரிசி ரொட்டி! அற்புதமான எளிய தீர்வு

nathan