29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
areyourearsgoingtoomuchbad
ஆரோக்கியம் குறிப்புகள்

காது சரியா கேட்கமாட்டீங்குதா?கட்டாயம் இதை படியுங்கள்

முன்பு எல்லாம் நமது வீட்டு கிழவிகளுக்கு ஊசி பட்டாசு வெடித்தாலே “ஏண்டா இம்புட்டு சத்தமா வெடிக்கிறீங்க… அங்குட்டு தூர போயி வெடிங்கடா..” என்று புலம்பி தள்ளுவார்கள். இன்றோ அதற்கு நேர் மாறாக அணுகுண்டு வெடித்தால் கூட ஏதோ ஊசி மணி கீழே விழுந்தது போல திரும்பி பார்கின்றனர் பல இளசுகள். காதினில் 24 மணி நேரமும் 5.1 க்யூப் அளவு தரம் மிகுந்த ஹெட்செட் அணிந்துக் கொண்டு திரிவது தான் இதற்கான காரணம்.

 

இதில் அப்படி என்ன இருக்கிறது? என்று கேட்டால், பாடல்களை அப்போது தான் மிக தெளிவாக ஒவ்வொரு டிரேக்கையும் தரத்தோடு கேட்க முடியும் என்று உச்சுக் கொட்டுகின்றனர். ஏனைய்யா அப்படி கேட்டு என்ன பயன் விளையப் போகிறது. ஒரு மண்ணும் கிடையாது. போதாகுறைக்கு அதை கழற்றி வைத்த பின்னரும் கூட அவர்களை அழைக்க மைக்செட் வைத்து கூவ வேண்டி இருக்கிறது, காரணம் காது டுமீல் ஆகிவிட்டது.

 

நாம் “இதுவெல்லாமா ஒரு பிரச்சனை…” என்று எண்ணுவதெல்லாம் தான் பெரிய பிரச்சனையாக உருமாறும் என்பதை அறிந்துக் கொள்வதே இல்லை. நன்றாக யோசித்து பாருங்கள். முன்பெல்லாம் நீங்கள் கேட்டு ரசித்த இலைகளும், கிளைகளும் அசையும் ஒய்யார சப்தத்தையும், பறவைகள் ஒன்றிணைந்து இசைக்கும் இன்னிசை ஓசைகளையும் இன்று நீங்கள் கேட்டிருக்க வாய்ப்புகள் இல்லை.

 

ஒரு பக்கம் அந்த இனத்தை ஏறத்தாழ அழித்துவிட்டோம் என்றிருந்தாலும். இன்னும் அவை நமது வீட்டருகே கூவிக்கொண்டு தான் இருக்கின்றன அதை உணரக்கூடிய செவிக் கூர்மையை தான் நாம் இழந்து கொஞ்சம் கொஞ்சமாய் வருகிறோம். அதை சரி செய்ய என்ன வழிகள் இருக்கின்றன என்பதை இங்கு காணலாம்…

மனித செவிகளின் திறன்

மனிதனின் செவிகள் அதிக பட்சமாய் 20Hz இல் இருந்து 20KHz வரையிலான சப்தத்தை கேட்கும் திறன் கொண்டது.

குறைந்தபட்சம்

மிகவும் குறைந்த பட்சமாக 12Hz வரையிலான சத்தத்தை கூட மனிதர்களின் செவிகளால் கேட்க முடியும். அதற்கு கீழே ஒலிக்கும் சப்தத்தை கேட்கும் திறன் கிடையாது. அதேப்போல 20Khz-க்கு மேலான சப்தம் கேட்கும் போது காதுகளிலும், மூளையிலும் பயங்கரமான வலி ஏற்படும் .

அலறும் சத்தத்தை விட்டு தள்ளி இருங்கள்

உங்கள் செவிகளின் திறன் குறைவதற்கு காரணம், தொடர்ந்து நீங்கள் அலறும் சப்தங்களை கேட்டுக் கொண்டே இருப்பது ஆகும். ஒருவேளை உங்களது சுற்றுசூழல் அவ்வாறான முறையில் அமைந்திருந்தால், அந்த சூழலை விட்டு தள்ளி இருப்பது அவசியம்.

அசௌகரியம்

நீங்கள் தொலைகாட்சி பார்க்கும் போதோ அல்லது பாடல்கள் கேட்கும் பொழுதோ, உங்கள் செவிகள் அசௌகரியமாக இருந்தால், தயவு செய்து எல்லாவற்றையும் அனைத்து வைத்துவிட்டு சற்று நேரம் செவிகளுக்கு ஓய்வு கொடுங்கள்.

செவிகளுக்கு ஓய்வு

நீங்கள் எங்காவது வெளியில் மிகவும் சப்தமான சூழலில் இருந்து வீடு திரும்பியிருந்தால் குறைந்தது அரைமணி நேரமாவது செவிகளுக்கு ஓய்வு கொடுங்கள். மீண்டும் வீட்டில் வந்து டி.வி பார்ப்பது அல்லது யாருடனாவது பேசிக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை தவிர்க்கவும்.

சப்தத்தின் நிலை

குறைந்த சப்தத்தில் இருந்து திடீரென அதிக சப்தம் கேட்பதை தவிர்த்து விடுங்கள். இது உங்களது செவிகளை வெகுவாக பாதிக்கும்.

காதுகளில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள்

டிராபிக் மற்றும் சுற்றுசூழல் ஏற்படுத்தும் அதிகமான இரைச்சல்களில் இருந்து தப்பிக்க, காதில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அது மூக்கையும் எட்டும் நிலை ஏற்படலாம்.

ஹெட்செட்

விலை உயர்ந்தது, தரமானது என நீங்கள் பேஸ் அதிகமான, சப்தத்தை மிக துல்லியமாக உங்கள் காதின் உள்ளே அமர்ந்து இசை கச்சேரி நடத்துவது போல உணரவைக்கும் ஹெட்செட் பயன்படுத்துவது எல்லாம் தேவையற்றது. இது உங்களது காது கேட்கும் திறனை குறைத்தது விடும். அதற்கு நீங்கள் நிஜமான இசை கச்சேரியில் கூட போய் சிறிது நேரம் அமர்ந்து வரலாம் மனதிற்கு நிம்மதி தரும்.

இயற்கை சூழலில் இசை

முடிந்தால் இயற்கை சூழலுக்கு சென்று அந்த இனிமையான ஓசைகளையும், இசைகளையும் கேட்டு ரசியுங்கள் உங்கள் காதுக்கு அது ஒர் யோகா பயிற்சி பல அமையும். புத்துணர்ச்சி அளிக்கும்.

Related posts

இந்த பொருட்களை வீட்ல வெச்சுருக்காதீங்க… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது.

nathan

பெண்களின் ஆசைகளில் ஒரு அதிசய மாற்றம்

nathan

உங்களுக்கு டைம்க்கு பீரியட்ஸ் ஆகலையா? அப்படின்னா இதை செஞ்சிப் பாருங்க..

nathan

வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?

nathan

உங்களுக்கு தொியுமா ? நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. ! !

nathan

இந்த 5 ராசிக்காரங்க எல்லோரையும் சந்தோஷமா வைச்சுக்கவே படைக்கப்பட்டவங்களாம்…

nathan

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

nathan