28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1520
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவ காலத்தில் உண்டாகும் வால் எலும்புவலியை எப்படி சரிசெய்யலாம்?

நீங்கள் கருவுற்ற காலத்தில் கண்டிப்பாக நிறைய வலிகளை சந்தித்து இருப்பீர்கள். கருவுற்ற பெண்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைப் பொருத்து அவர்களுக்கு இந்த காலக் கட்டத்தில் வெவ்வேறு விதமான வலிகளும் வருகின்றனர். ஆனால் நிறைய பெண்கள் பொதுவாக கூறும் விஷயம் என்னவென்றால் தண்டு வட வலி என்பது தான்.

கருப்பையில் குழந்தை வளர வளர அதற்கு ஏற்றமாதிரி பெண்களின் உடல்நிலையும் மாற்றம் பெறுகிறது. இதனால் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிகமான அழுத்தம் அவர்களின் தண்டுவடத்தில் தான் பாய்கிறது. மேலும் தண்டுவடத்திற்கு பக்கபலமாக உள்ள தசைகள், தசை நார்கள் போன்றவற்றுக்கும் இந்த வலி பரவுகிறது.

இந்த அழுத்தத்தால் தான் பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. சில தசைகளின் வலியை மசாஜ் செய்வதன் மூலமும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதன் மூலமும் சரி செய்து கொள்ளலாம்.

ஆனால் தண்டுவட வால் பகுதி வலி என்பது கொஞ்சம் தீராத வலியாக இருக்கும். எனவே இந்த மாதிரியான வலியிலிருந்து உங்கள் பிரசவ காலங்களில் விடுபட நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு கூறயுள்ளோம்.தண்டுவட வால் எலும்பு வலி என்றால் என்ன?

வால் எலும்பு என்பது நமது தண்டுவட இறுதியில் உள்ள முக்கோண வடிவ பகுதி ஆகும். இது கோக்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. தண்டுவடத்தின் இறுதியில் பிட்டத்திற்கு மேலே உள்ள ஒரு பகுதி.

இந்த ஓரே ஒரு எலும்பு தான் நீங்கள் நிற்பது மற்றும் உட்காருவது போன்றவற்றிற்கு உதவுகிறது. இந்த வால் எலும்பு தசைகள், தசை நாண்கள் மற்றும் தசை நார்கள் போன்றவற்றின் உறுதுணையால் ஆனது.

வால் எலும்புவலி என்பது தண்டுவடத்தின் கீழ்பகுதியில் பிட்டம் சந்திக்கும் இடத்தில் மந்தமான அல்லது ஊசி குத்தினது போல் சுருக்கென்று வலி ஏற்படும். இந்த வலியின் மருத்துவ பெயர் கோக்ஸிடைனியா.

வால் எலும்புவலி வரக் காரணங்கள்

பிரசவ ஹார்மோன் மாற்றத்தால்

பிரசவ காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ரிலாக்ஸின் என்ற ஹார்மோன்கள் சுரக்கப்படும். இந்த ஹார்மோன் நமது இடுப்பு பகுதியில் உள்ள தசைநார்களை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. மேலும் இடுப்புப்புற தசைகள் கருப்பையில் வளரும் குழந்தைக்குத் தகுந்த மாதிரி நகரும். இதனால் இந்த ஒட்டுமொத்த மாற்றத்தால் நமது வால் எலும்பும் நகரும். இதனால் தான் அந்த பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலி ஏற்படுகிறது.

வயிற்றில் வளரும் குழந்தை

பிரசவ காலத்தின்இறுதிப்பகுதியில் குழந்தையின் வளர்ச்சி கருப்பையில் அதிகமான இடத்தை பிடிக்கும். இதனால் குழந்தை வளர வளர அதன் அழுத்தம் முதுகுப்புற வால் எலும்பு பகுதியை அழுத்தும். ஏனெனில் பெண்களின் கருப்பைக்கு பின்னால் அமைந்து இருக்கும் பகுதி இது தான். இதனாலும் தான் பிரசவ காலங்களில் வால் எலும்பு வலியும் தொடர்கிறது.

இருமல் மற்றும் தும்மல்

இதைத் தவிர நாம் இருமும் போது அல்லது தும்மல் ஏற்படும் போது ஏற்படும் அழுத்தத்தாலும் வால் எலும்புப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது.

விறுவிறுப்பான வேலை செய்தல்

விறுவிறுப்பான வேலையான சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் மற்றும் நடத்தல் போன்றவையும் வால் எலும்பு வலியை ஏற்படுத்துகிறது. ஏன் நீங்கள் நீண்ட நேரம் ஓரே இடத்தில் நின்று கொண்டு இருந்தால் கூட இந்த வலி ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் வால் எலும்பு வலி அதிகரிப்பதற்கான காரணங்கள்

பிரசவ காலத்தில் இந்த வால் எலும்பு பகுதி என்பது முக்கியமானது. ஆனால் இதில் ஏற்படும் வலியால் பிரசவ காலம் வலியுள்ளதாக மாறி விடுகிறது.

சிம்பசிஸ் பிபிஸ் டிஃப்ஃபான்ஷன்(இடுப்பு எலும்பு பிறழ்ச்சி)

இந்த சிம்பசிஸ் பிபிஸ் டிஃப்ஃபான்ஷன் போது நமது இடுப்பெலும்பு மற்றும் அதன் தசை நார்கள் நீட்சியடைந்து வலுவிழந்து போகிறது. இதனால் இந்த வலி நமது மூட்டுகள் மற்றும் வால் எலும்பை தாக்குகிறது.

முள்ளெழும்பு தட்டு

நமது முதுப்புறத்தில் உள்ள முள்ளெழும்பு தட்டு நகர்ந்து விடுவதால் வால் எலும்பு வலி ஏற்படுகிறது . இதனால் தான் நமது பாதங்களில் சில சமயங்களில் சுருக்கென்று வலி உண்டாகிறது. மேலும் கால்களிலும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பரவுகிறது.

மலச்சிக்கல்

நீங்கள் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்பட்டால் கர்ப்ப காலத்தில் வால் எலும்பு வலி அதிகரிக்கிறது.

கீழ் முதுகுப்புற காயம்

உங்கள் கீழ் முதுகில் ஏதாவது காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் கர்ப்ப காலத்தில் நீங்கள் வால் எலும்பு வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது.

இடுப்புப்பகுதி புற்று நோய்

இடுப்புப்பகுதியில் புற்றுநோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தாலும் வால் எலும்பு வலி உண்டாகும்.

வால் எலும்பு வலியை எப்படி சரியாக்குவது?

இந்த வலி உங்களை அசெளகரியமாக உணர வைக்கும். இதை உடனடியாக சரி செய்வது என்பது முடியாத காரியம். கர்ப்ப காலத்தில் சில மாதங்களில் இந்த வலி இருந்து பின்னர் அப்படியே மறைந்து விடும். நீங்கள் தொடர்ந்து தாங்க முடியாத வால் எலும்பு வலியால் அவதிப்பட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது. சில மருந்து மாத்திரைகள் அல்லது வால் எலும்பு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்யலாம்.

வால் எலும்பு வலி பிரசவத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துமா?

நீங்கள் தாங்க முடியாத வால் எலும்பு வலியால் அவதிப்பட்டு வந்தால் பிரசவ வலி ஏற்படாது. எனவே குழந்தையை எடுக்க மருத்துவர்கள் சிசேரியன் முறையை கையாள வாய்ப்புள்ளது. அப்போ இந்த வலியைக் குறைக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா?… இதோ இதை செய்யுங்கள்…

நேராக நிற்க அமர பழகுங்கள்

நேராக சரியான அமைப்பில் உட்காருவது, நிற்பது போன்றவை உங்கள் வால் எலும்பு வலியை குறைக்க உதவும். நீங்கள் தவறான முறையில் உட்காருதல் மற்றும் நிற்றல் போன்றவற்றைச் செய்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது. நேராக நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள். உங்கள் பாதங்களைத் தரையில் வைத்து கழுத்தை நேராக வைக்க பழகுங்கள். உங்கள் பின்புற முதுகுப் பகுதி லேசாக மட்டுமே வளைந்து இருக்க வேண்டும். உங்களுக்கு அசெளகரியமாக இருந்தால் நேராக தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு அமர்ந்து பழகுங்கள்.

சரியான அமைப்பில் தூங்க வேண்டும்

நீங்கள் குப்புற மற்றும் மல்லாக்க படுக்காமல் பக்கவாட்டில் படுப்பது நல்லது. இதனால் வால் எலும்பு வலி குறைவதோடு குழந்தைக்கும் இரத்த ஓட்டம் சீராக பாயும். உங்கள் கால்களுக்கிடையே ஒரு தலையணை வைத்து தூங்குவது உங்களுக்கு இன்னும் செளகரியத்தை கொடுக்கும்.

செளகரியமான உடையை அணியுங்கள். நல்ல தளர்ச்சியான உடைகளை மட்டுமே அணிந்து கொள்ளுங்கள். இறுக்கமான உடைகள் இன்னும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வால் எலும்பு வலியை உண்டாக்கி விடும்.

டோனட் தலையணையை பயன்படுத்துங்கள்

வெறும் தரையில் உட்காருவதற்கு பதிலாக டோனட் தலையணை போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். முதுகுப்புறப் பகுதியில் கூட தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வதற்காகவே சில பந்து போன்ற கருவிகள்கடைகளில்கிடைக்கின்றன. அதுவும் உங்கள் வால் எலும்பு வலியை குறைக்க உதவும். பணியின் போது பயன்படுத்தும் சாயும் நாற்காலிகளும் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

மகப்பேறு பெல்ட் பயன்படுத்துங்கள்

இரண்டாவது மற்றும் மூன்றாவது கர்ப்ப கால பகுதியில் உங்களுக்கு உறுதுணையாக மகப்பேறு பெல்ட் கூட பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பெல்ட் உங்கள் முதுகுப்புற பகுதியில் நிலவும் அதிக அழுத்தத்திலிருந்து விடுதலை கொடுக்கும். இதை பிரசவத்துக்குப் பின்னர் கூட உங்கள் வயிற்றுப்பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வரப் பயன்படுத்தி கொள்ளலாம்.

அடிக்கடி உங்கள் நிலையை மாற்றுங்கள்

ஓரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மற்றும் உட்கார்ந்து இருப்பது போன்றவற்றைத் தவிர்த்து அடிக்கடி உங்கள் நிலையை மாற்றி கொள்ளுங்கள். கொஞ்சம் தூரம் நடந்து கொடுக்கலாம், ஆனால் குனிந்து தரையில் எதாவது பொருள் எடுக்கும் போதோ நடக்கும் போதோ கவனமாக இருப்பது நல்லது.

ஒத்தடம் கொடுக்கும் கருவி பயன்படுத்துங்கள்

வால் எலும்பு வலியை போக்க ஒத்தடம் கொடுக்கும் கருவி பயன்படுகிறது. இந்த சூடேற்றும் தலையணை போன்றதை கொண்டு உங்கள் வால் எலும்பு பகுதியை ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் வரை என 4 முறை செய்யலாம்.

தகுந்த காலணிகளை அணியுங்கள்

ஹீல்ஸ் போன்ற காலணிகள் உங்கள் வால் எலும்பு பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும். எனவே ஃபிளாட்டாக உள்ள லேசான காலணிகள், நல்ல பஞ்சு போன்ற ஷூ போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

மலச்சிக்கலை தவிர்த்திடுங்கள்

நல்ல ஆரோக்கியமான நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. நன்றாக நடந்து கொடுங்கள். இது உங்கள் இடுப்பெலும்பு நீட்சியடைய உதவும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தடுக்கலாம். தினமும் மலம் கழிக்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சினைகள் இல்லாமல் வால் எலும்பு வலியும் ஏற்படாமல் தடுத்து விடலாம்.

வேகமாக உங்கள் நிலையை மாற்றாதீர்கள்

எதையும் வேகமாக அவசரமாக செய்யாதீர்கள். உட்கார்ந்து இருந்தாலோ அல்லது நின்றாலோ உடனடியாக உங்கள் நிலையை மாற்றாதீர்கள். மெதுவாக செய்யுங்கள். அவசர அவசரமாக செய்யும் இந்த செயல் கூட வால் எலும்பு வலியை உண்டாக்கும்.

மசாஜ் செய்யுங்கள்

பிஸியோதெரபிஸ்ட் யை சந்தித்து உங்கள் வால் எலும்பு பகுதியை மசாஜ் செய்து கொடுங்கள். ஏனெனில் இந்த மசாஜ் உங்களுக்கு வலியைக் குறைக்கும்.

யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

ரொம்ப சிக்கலான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளாதீர்கள். உங்களுக்கு செளகரியமான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் வால் எலும்பு வலி குறையும். சில உடற்பயிற்சிகள் உங்கள் வலியை போக்கும்

நீச்சல் அடிப்பதை போன்ற உடற்பயிற்சிகளை உங்கள் முகுது மற்றும் காலுக்குக் கொடுங்கள், மேலும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் முதுகுப்புறப் பகுதி, இடுப்பெலும்பு பகுதிக்கு நல்லா ரிலாக்ஸ் கிடைக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கேன்சர் ஏன் வருகிறது? தடுக்க என்ன வழி?

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

nathan

400க்கும் மேல சர்க்கரையின் அளவும் சட்டென குறையும்! இதோ எளிய நிவாரணம்

nathan

அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்

nathan

டீன்-ஏஜ் பெண்கள் நாப்கின் மாற்றுவது பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்ன?

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பி.சி.ஓ.டி. பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லணுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தும்மலை தடுக்க முயற்சி செய்யாதீர்கள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!

nathan