23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1519
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்

இதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் இந்த இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கருத்துப்படி பார்த்தால் ஒவ்வொரு வருடமும் 1.7 மில்லியன் இந்தியர்கள் இதய நோயால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த இதய நோய்கள் தற்போது இந்தியாவில் பெருகி வரும் நோய்களின் பட்டியலாக உள்ளது.

நம் இந்திய நாட்டில் இயங்கி வரும் இந்திய இருதய சங்கம் கருத்துப்படி 50 வயதானவர்களுக்கு 50 %இதயம் செயலிழப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது. இதுவே 40 வயதானவர்களுக்கு 25% இதயம் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் பெண்கள் அதிகமாக டயாபெட்டீஸ், உடல் பருமன், இதயம் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மன அழுத்தம் மற்றும் பக்க வாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிப்படைகின்றனர்.

அறிவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு படி பார்த்தால் இந்தியர்களின் இதய நோய்கள் அவர்களின் மரபணு சார்ந்த விஷயமாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்கள். இதைத் தவிர புகைப் பழக்கம், அதிக கொலஸ்ட்ரால், இறைச்சி உண்ணுதல் போன்ற பழக்க வழக்கத்தால் உடல் மெட்டா பாலிசம் மாறுபட்டு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்தியா பழக்க வழக்கங்கள் மட்டுமே இதய நோய்கள் வர காரணமாக அமைவதில்லை. கீழே நாங்கள் கூறும் சில ஆச்சரியமூட்டும் விஷயங்களும் பெண்களுக்கு இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது.

12 வயதிற்கு முன்னாடியே பருவமடைதல்

பெண்கள் சீக்கிரமாகவே பருவமடைவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதைய ஆராய்ச்சி படி பார்த்தால் 13 வயதில் பருவமடையும் பெண்களை விட 12 வயதிற்கு முன்னாடியே பருவமடையும் பெண்கள் 10% இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை பெறுகின்றனர் என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதும் இதனால் இரத்தம் கட்டுதல் மற்றும் பக்க வாதம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

ப்ளூ காய்ச்சலால் தற்போது அவதிப்பட்ட நிலை

கடுமையான ப்ளூ காய்ச்சலால் தற்போது நீங்கள் அவதிப்பட்டு இருந்தாலும் அதனால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இந்த கடுமையான ப்ளூ பாக்டீரியா மற்றும் வைரஸ் நம் இதயத்திற்குள் ஊடுருவி இந்த மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கடுமையான ப்ளூவால் அவதிப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

டயட் மாத்திரைகளை எடுத்தல்

பெண்களே உஷார். டயட் மாத்திரைகள் பெரும்பாலும் எந்த வித பலனும் அளிப்பதில்லை. இந்த டயட் மாத்திரைகள் மருந்துகள் உங்கள் இதயத்திற்கு கேடு விளைவிக்க கூடியது. இந்த டயட் மாத்திரைகள் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து மற்றும் இதயத் துடிப்பையும் அதிகரித்து இதய செயல்பாட்டுக்கு நெருக்கடி விளைவித்து விடும். நீங்கள் தொடர்ந்து இந்த டயட் மாத்திரைகளை எடுத்து வந்தால் கண்டிப்பாக உங்கள் இதயம் பாதிக்கப்படுவது உறுதி. எனவே இதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்பம்

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உங்கள் ஒட்டுமொத்த உடலும் உறுப்புகளும் நிறைய வேலைகளை செய்யும். உங்கள் இதயம் இரண்டு மடங்கு இரத்தத்தை பம்ப் செய்து அதிக வேலையை அப்பொழுது செய்யும். அப்போது நீங்கள் கர்ப்ப கால நீரிழிவு நோயால் அவதிப்பட்டு இருந்தால் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.

மனமுடைதல்

நீங்கள் உணர்வுப் பூர்வமான பன அழுத்த பிரச்சினைகள், மன முடையும் கவலைகள் போன்றவற்றால் பாதிப்படைந்து இருந்தால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. மன முடையும் பிரச்சினைகளான உங்கள் அன்பானவர் பிரிவு, காதல் பிரிதல், நிதி நெருக்கடி, விவகாரத்து போன்ற அழுத்தங்கள் கவலைகள் கூட இதய நோய் வர காரணமாக அமைகிறது. இதற்கு தியானம், யோகா மற்றும் தெரபி போன்ற மன ரிலாக்ஸ் உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

தினசரி மதுப்பழக்கம்

தினசரி வேலை களைப்பிற்கு நிறைய பேர் வீட்டிற்கு வந்ததும் ஒரு கிளாஸ் வொயின் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் இந்த வொயினில் உள்ள ஆல்கஹால் நம் இதயத்திற்கு நல்லது இல்லை. தினசரி இரண்டு முறை ஆல்கஹால் அருந்துவதால் இதய நோய்கள் வர அதிகமான வாய்ப்புள்ளது. எனவே இதை குறைவான அளவில் குடிப்பது நல்லது. இதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

அழற்சி நோய் பாதிப்பு

முடக்கு வாதம் பொதுவாக பெண்களைத் தான் அதிகளவில் தாக்குகிறது. இந்த வாதமும் பெண்களுக்கு இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. இந்த அழற்சி நோய் இரத்த குழாய்களை பாதிப்படையச் செய்து கசடுகளை, கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்கச் செய்து இதய நோய்களை உண்டு பண்ணுகிறது. எனவே இயற்கையான அழற்சி எதிர்ப்பு பொருள் உணவுகளை எடுப்பதன் மூலமும் மருத்துவர்களை அணுகுவதன் மூலம் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.

தனிமையாக இருத்தல்

தனிமை கொல்லும் என்று சொல்வார்கள் அது உண்மை தான். நீங்கள் தனிமையாக இருந்தாலோ அல்லது சமூகத்தால் ஒதுக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்தாலோ இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் 30% வர இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. எனவே நீங்களே சமூக வலைத் தளங்கள், குரூப் கலந்துரையாடல், நண்பர்களுடன் உரையாடுதல் இப்படி எல்லாவற்றிலும் இணைந்து உங்களை உற்சாகமாக்கி கொள்ளுங்கள். உங்கள் தனிமையை குறைத்து கொள்வது நல்லது.

மனக் கவலைகள்

மன அழுத்தம் இதய நோய்கள் வர முக்கிய காரணமாக அமைகிறது. நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தால் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. மேலும் மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

கவனக் குறைவு கேளாறு

நாள்பட்ட கவனக் குறைவு கேளாறு போன்றவைகளும் இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. எந்த பெண்கள் இந்த மாதிரியான கவனக் குறைவு கோளாறால் அவதிப்படுகிறார்களோ அவர்களுக்கு இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அதிகப்படியான இதயத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம் இதய நோய்கள் வர அபாயகரமானதாக அமைகிறது.

Related posts

மாதவிடாய் பிரச்சனைகள்… உடல் எடை அதிகரிப்பும், காரணங்களும்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

டீன்-ஏஜ் பெண்கள் நாப்கின் மாற்றுவது பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்ன?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

nathan

மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

nathan

கர்-ப்பத்தைத் தடுக்க நீண்ட கால க-ருத்தடை சாதனம்

nathan

கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

மூக்கு ஒழுகல் தொல்லை தாங்க முடியலையா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இருமலைப் போக்க எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்!!!!

nathan