மீன்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். வாரம் ஒருமுறை தவறாமல் மீனை சேர்த்துக் கொள்ளுங்கள் என பல மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மீன்களில் ஏராளமான அளவில் உள்ளது. அதில் முக்கியமான ஓர் சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்த கொழுப்பு அமிலம் மற்ற உணவுப் பொருட்களில் இருந்தாலும் மீன்களில் வளமாக நிறைந்துள்ளது.
Health Benefits of Eating Fish Eyes
சிலர் மீன் சாப்பிடும் போது அதன் சதைப் பகுதிகளை மட்டும் சாப்பிட்டு, அதன் தலையைத் தூக்கி போட்டுவிடுவார்கள். சொல்லப்போனால் மீன்களின் தலை மற்றும் கண்களில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதைத் தூக்கி எறிந்துவிட்டு மீன்களை சாப்பிடுவதில் என்ன இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மீன்களில் இருந்து முழு நன்மைகளையும் பெற வேண்டுமானால், அதன் தலையைத் தூக்கி போடாதீர்கள். முக்கியமாக அதன் கண்களை அவசியம் சாப்பிடுங்கள்.
உங்களுக்கு மீன்களின் கண்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மீன்களின் கண்களை ஒருவர் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் மீன் சாப்பிட்டால், அதன் கண்களையும் சேர்த்து சாப்பிடுங்கள்.
பார்வை மேம்படும்
மீனின் கண்களை சாப்பிட்டால் பார்வைக்கு நல்லது. பார்வை பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி மீனின் கண்களை சாப்பிட்டு வந்தால், பார்வை கோளாறு நீங்கிவிடும். இதற்கு மீன்களின் கண்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் முக்கிய காரணம். எனவே உங்களுக்கு பார்வை பிரச்சனை வரக்கூடாது என்றால், மீன் கண்களை சாப்பிடுங்கள்.
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்திற்கு மீன்கள் மிகவும் முக்கியமானது. ஏனெனில் மீண்களில் உள்ள சத்துக்கள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆய்வு ஒன்றில், மீன்களை கண்களுடன் அடிக்கடி சாப்பிட்டு வந்தவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதர இதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க மீன் கண்களை தவறாமல் சாப்பிடுங்கள்.
மன இறுக்கம் நீங்கும்
மனநல பிரச்சனைகளான மன இறுக்கத்தில் இருந்து விடுபட மீன்கள் உதவியாக இருக்கும். ஒருவருக்கு மன இறுக்கம் இருந்தால், மிகவும் கவலையுடன், மிகுந்த களைப்புடன், வாழ்க்கை வாழ்வதற்கே விருப்பமில்லாமல், எந்த ஒரு செயலிலும் ஈடுபட ஆர்வம் இல்லாமல் இருக்கும். ஆனால் மீன்களை கண்களுடன் சேர்த்து ஒருவர் அடிக்கடி சாப்பிடுவதால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடி விடுவிக்கும்.
மூளை ஆரோக்கியம்
சில ஆய்வுகளில் தினமும் மீன் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஞாபக மறதி போன்றவற்றின் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. மீன்களை கண்களுடன் சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு மேம்பட்டு, நினைவாற்றல் மேம்படுவதோடு, உணர்வுகளும் சீராக இருக்கும். எனவே நீங்கள் ஸ்மார்ட்டாக செயல்பட விரும்பினால், அடிக்கடி மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
அழற்சி
ஆராய்ச்சியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நாள்பட்ட அழற்சியைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில் தொடர்ந்து ஆறு வாரங்கள் மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தவர்களுக்கு, மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரத்தத்தில் உள்ள அழற்சியைக் குறைப்பது தெரிய வந்தது. எனவே அழற்சி ஏதேனும் இருந்தால் மீன்களை கண்களுடன் சாப்பிடுங்கள். இதனால் விரைவில் சரியாகிவிடும்.
சர்க்கரை நோய்
மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் மற்றொரு நன்மை, சர்க்கரை நோயை தடுக்கும் என்பது. மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவைக் குறைக்கும். அதோடு மீன்களை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைப்பதோடு தடுக்கலாம்.
நல்ல தூக்கம்
மீன்களின் கண்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் டி நல்ல தரமான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் என சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதிலும் ஒருவர் சால்மன் மீனை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் தான் மற்ற மீன்களை விட அதிகளவு வைட்டமின் டி நிறைந்துள்ளதாம்.
மூட்டு வலி
மூட்டு வலியில் இருந்து அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கும். இத்தகைய கொழுப்பு அமிலங்கள் மீன்களின் கண்களில் அதிகளவு நிறைந்துள்ளது. பெல்ஜியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலியில் இருந்து விடுவிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே மூட்டு வலி உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
ஆஸ்துமா
ஆஸ்துமா என்னும் பிரச்சனையானது மூச்சுக்குழாய்களில் நாள்பட்ட அழற்சி இருந்தால் ஏற்படும் நிலையாகும். ஆய்வு ஒன்றில் குழந்தைகளுக்கு மீன்களை கண்களுடன் கொடுத்து வந்ததில், குழந்தைகளுக்கு ஆஸ்துமாவின் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது பெரியவர்களுக்கு எவ்வித பலனையும் தரவில்லை.
கொலஸ்ட்ரால்
மீன்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் போது, அதன் கண்கள் மட்டும் உதவாதா என்ன? மீன்களின் கண்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதாவும், இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதாகவும், இதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.
புற்றுநோய்
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக் ஊட்டச்சத்தின் அடிப்படையில், மீன்களின் கண்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்குமாம். தொடர்ந்து மீன் மற்றும் அதன் கண்களை உட்கொள்பவர்களுக்கு, செரிமானம், வாய், குரல்வளை, குடல் மற்றும் கணைய புற்றுநோயின் அபாயம் குறைவாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதர நன்மைகள்
மீன் கண்களை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ஆட்டோ இம்யூன் நோய்களின் அபாயம் குறையும், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை மேம்படும். ஆகவே எப்போதும் மீன் சாப்பிட்டால் அதன் தலை மற்றும் கண்களைத் தூக்கி எறியாதீர்கள்.
உங்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.