29 C
Chennai
Saturday, Jun 29, 2024
water can help prevent disease SECVPF
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்

மனித வாழ்க்கைக்கு மட்டுமில்லை, அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீரால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. தினம் தினம் சரியான அளவில் நீரை பருக வேண்டும்.

உடலில் நீரின் அளவு குறைந்தால், பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். “நீரின்றி அமையாது உலகு” என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் நம்ம திருவள்ளுவர் கூட விளக்கியுள்ளார். எனவே தண்ணீரின் அருமையை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாம் தண்ணீரை குடிக்க வேண்டும். குடித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை பருகலாமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. வாருங்கள்… வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.. இப்படி பல நன்மைகள் கிடைக்கும்.

நீரில் வெந்தியம், தேன், துளசி, வில்வம், அருகம் புல், இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நமைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நீர் மற்றும் வெந்தயம்
வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பெண்களுக்கு ஏற்பட்டு வயிற்றுவலியை குறைக்கும்.

நீர் மற்றும் சீரகம்
சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நீருடன் தேன்
இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

Related posts

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

காலை உணவாக கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவோர் கவனத்துக்கு…!

nathan

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

ஆரோக்கியத்திற்கு நல்லது கொய்யா ….

nathan

தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்!

nathan

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி!

nathan

கிச்சன் கிளினிக் – உணவே விருந்து உணவே மருந்து

nathan

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

nathan

வெயில் காலத்துல நீங்க தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan