மக்கள் ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது தொடர் மழையால் பல நோய்கள் பரவுகிறது. அதிலும், முக்கியமாக சளி, காய்ச்சல் போன்றவை உடனே பரவக்கூடும்.
இதனால், இதிலிருந்து தற்காத்துகொள்ள என்ன செய்யலாம்? சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம். காலை உணவாக தூதுவளை சட்னி, துவையல், இஞ்சி துவையல் சேர்த்துக்கொள்ளலாம்.
மதிய உணவில் கொள்ளு ரசம் கொள்ளு துவையல் சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி ரசம் மிளகு ரசம், கண்டதிப்பிலி ரசம் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும், மிளகு, வெள்ளைப்பூண்டு, கொள்ளு, சீரகம் திப்பிலி, போன்றவைகளை கொண்டு காரக்குழம்பு வைத்து சாப்பிடலாம். பழங்கள் குளிர்ச்சியுடையது என்பதால், அவற்றுடன் மிளகு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
எந்த உணவாக இருந்தாலும், சூடுபடுத்திக் சாப்பிடாமல், உடனே தயார் செய்து சாப்பிடும் உணவாக இருக்கவேண்டும். அதேப்போல், இரவு வேளையில், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, கொள்ளுப்பயிறு சேர்த்து வறுத்து பொடியாக்கி உணவில் சேர்த்துகொள்ளலாம்.
மேலும், சூடாக சாப்பிட சுக்கு மிளகு, தனியா, ஏலக்காய் பொடியாக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து, சுக்கு, வெந்நீர் அல்லது சுக்கு காபி, பனை வெல்லாம் சேர்த்து தேநீராக கொதிக்க விட்டு சாப்பிடலாம்.