25.2 C
Chennai
Wednesday, Nov 20, 2024
04 1436
ஆரோக்கிய உணவு

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்து வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுபவரா நீங்கள்? இதையும் படிங்க

பொதுவாக பெரும்பாலான மக்களின் காலை உணவில் முட்டை அதிகமாக முக்கியத்துவத்தை பிடித்துள்ளது. ஆனால் சில தருணங்களில் மஞ்சள் கருவினை சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகும் என்று நினைப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடுகன்றனர்.

முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடுவதன் மூலம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஏ, டி, ஈ, கே ஆகிய 6 வகையான பி வைட்டமின்களின் பலனை நாம் பெறு முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி சிக்கன், மீன், உருளைக்கிழங்கு மற்றும் அரிசி இவற்றில் இருக்கும் கோலின் சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகமாக இருப்பதுடன், இரும்பு மற்றும் துத்தநாகமும் நிறைவாகவே இருக்கின்றதாம்.

புரதச்சத்தின் சிறந்த ஆதாரமான உணவாக இருக்கும் முட்டையில், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய தாதுக்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் டி மற்றும் பி 12 ஆகியவை அதிகமாகவே இருக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதுடன், கண்கள் மற்றும் சருமத்தினையும், கூந்தலுக்கும் நன்மை தந்து ஆற்றலை அதிகரிக்கின்றது.

பலரும் கொலஸ்ட்ரால் அதிக அளவு இருக்கும் என்று ஒதுக்கி வைக்கும் மஞ்சள் கருவில், 187 மில்லிகிராம் கொழுப்பு உள்ளதாகவும், குறித்த கொழுப்பிற்கும், ரத்தக் கொழுப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் வெளிப்படுத்தவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.

ஆனால் ஐஸ்கிரீம், இறைச்சி மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற கொழுப்பு அதிகம் கொண்ட உணவுப்பொருட்களான இதுவே ரத்தக் கொழுப்பை அதிகரிக்கின்றதாம்.

ஆதலால் மஞ்சள் கருவை சாப்பிடுவதற்கு இனி பயம் வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

nathan

கறிவேப்பிலை சாறு

nathan

சுவையான பசலைக்கீரை பக்கோடா

nathan

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

nathan

பல்வேறு நோய்களை எளிதாக தீர்த்து வைக்கும் வெண்டைக்காய்

nathan

ஆட்டுக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

சூப்பர் டிப்ஸ் ! சளி, இருமல் தொல்லையா… இதமான மைசூர் ரசத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

nathan