27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
12 broccoli soup
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கான… ப்ராக்கோலி சூப்

காலிஃப்ளவர் போன்று பச்சையாக இருப்பது தான் ப்ராக்கோலி. பலருக்கு இந்த ப்ராக்கோலியை எப்படி சமைப்பதென்றே தெரியாது. ஆனால் இந்த ப்ராக்கோலியைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ப்ராக்கோலி மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

சரி, இப்போது அந்த ப்ராக்கோலியைக் கொண்டு எப்படி சூப் செய்வதென்று பார்ப்போமா!!!

Broccoli Soup Recipe
தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி – 1/2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
பூண்டு – 4 பற்கள்
தண்ணீர் – 1/8 கப்
பால் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ப்ராக்கோலியை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, அதனை குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அந்த குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, அதில் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி சூப் ரெடி!!!

Related posts

சூப்பர் டிப்ஸ்! உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அன்றாட உணவில் கொத்தமல்லி….!

nathan

காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்

nathan

கீழாநெல்லி சாப்பிடும் முறை

nathan

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!

nathan

இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை

nathan

கருப்பட்டியின் மகத்தான பயன் பருவமடைந்த பெண்களுக்கு முக்கியமான இடம் பிடித்த ஒன்று…

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

nathan

சுவையான கருப்பு சுண்டல் ரெசிபி

nathan