24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 vendaya kulambu
ஆரோக்கிய உணவு

சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

இதுவரை எத்தனையோ ஸ்டைலில் குழம்பு வைத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பலரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு ஸ்டைல் தான் ஐயங்கார் ஸ்டைல் உணவுகள். ஏனெனில் இந்த ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு அந்த ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து அதனை உங்கள் வீட்டில் செய்து சமைத்துப் பாருங்கள். நிச்சயம் இது உங்களின் விருப்பமான குழம்புகளில் ஒன்றாக இருக்கும்.

Iyengar Style Vendaya Kuzhambu
தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 5
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதே நேரம் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

பிறக அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!

Related posts

சூப்பர் டிப்ஸ்! ஹார்மோன்களை இயற்கையாக சீராக்க உதவும் அற்புதமான வழிகள்..!

nathan

சுலபமான வழிமுறைகள் இதோ..! இளநரை பிரச்சினை அடியோடு அழிக்க வேண்டுமா?..

nathan

தாமரை விதையை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

nathan

அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விட…

sangika

எவ்வளோ சாப்பிட்டாலும் பசிச்சுக்கிட்டே இரு tamil healthy food

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan

உங்களுக்கு தெரியுமா செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்ன?

nathan

ஆம்லெட் போடும் போது மஞ்சள் கருவின் நிறம் எவ்வாறு உள்ளது என பார்க்க வேண்டுமாம்….

sangika

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்

nathan