28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 618664c0ce
ஆரோக்கியம் குறிப்புகள்

கொரோனா சிகிச்சைக்கா மாத்திரை! வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்!

கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் அறிக்கையில்,

எங்களின் கரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள். ஆய்வின்போது, எங்களின் கரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது.

அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தமை தெரிய வந்தது.

அதோடு அந்தக் குழுவில் யாரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படாத குழுவினரில் 7 சதவீதத்தினா் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவா்களில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஃபைஸா் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டால்ஸ்டென் கூறுகையில்,

‘கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, மிக அபாரமாகச் செயல்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த மாத்திரை 90 சதவீத செயல்திறனைக் கொண்டதாகவும் கொரோனா மரண அபாயத்திலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்கும்’ என்றாா்.

அதோடு தங்களது கொரோனா சிகிச்சை மாத்திரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதாக ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை ஒழிப்பதற்காக பலநாடுகளும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க போராடி வரும் நிலையில், ஃபைஸா் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது உலகமக்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

இவ்வளவு நன்மைகளா? கொலுசு அணியும் பெண்களே…!

nathan

முக்கியமான அபாயகரமான நோய்க்கு ஏசி தான் காரணமாக இருக்கிறது!

sangika

நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!

nathan

தெரிஞ்சுக்கோங்க இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… படுக்கையறையில்

nathan

உங்களுக்கு அழகான தொடையை பெற வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

‘உலர் கண் நோய்’ எச்சரிக்கை “கணினி, செல்போன்களை இடைவிடாமல் பார்க்க வேண்டாம்”

nathan

சப்பாத்தி கள்ளி.!குழந்தையின்மை பிரச்சனையை தவிர்ப்பதற்கு..

nathan

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற எளிய வழி இதோ

nathan

30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan