காலை எழுந்தவுடன் பலரும் அலுவலகத்திற்கு செல்லும் முன் பதற்றத்துடன் அன்றைய நாளில் செயல்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல், வீட்டு வேலைகள் ஆகியவற்றை கடந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும். வேலைகளை தொடங்குவதற்கு முன்னர், ஒரு சில நிமிடங்கள் மனதை லேசாக்கி ஆழ்ந்த மூச்சு விடுங்கள்.
அதன் பின்னர் வேலை செய்ய தொடங்கினால், உங்கள் பணி சிறப்பாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சிலர் தூங்கி எழுந்தவுடன் வேலை செய்யத் தொடங்குக்கிறார்கள். அப்படி செய்யாமல் குளித்துவிட்டு புத்துணர்ச்சியாக வேலை செய்வது சிறந்ததாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் வேலையை புதிதாக தொடங்குங்கள். பழைய வேலைகளின் மன அழுத்தத்தை விட்டு விட்டு இன்று என்ன நடக்கும் என்பதில் கவனத்தை செலுத்துங்கள். இதனால், உங்கள் வேலைகளை விரைவாக முடித்துவிட்டு நிலுவையில் உள்ள பணிகளையும் வேகமாக முடிக்க செயல்படுங்கள்.
நீங்கள் எங்கு வேலை செய்ய தொடங்கினாலும், வெறும் வயிற்றில் வேலை செய்ய ஆரம்பிக்காதீர்கள். இவை உங்களை அடுத்த நாள் சோர்வடைய செய்யும். காலை உணவு மிகவும் அவசியமான ஒன்று. இவை உடளவில் மட்டுமின்றி மனதளவிலும், ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
காலையில் எந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும், எவ்வளவு மணி நேரத்திற்குள் அதனை முடிக்க வேண்டும் என திட்டமிட்டு கொள்ள வேண்டும். இதனால் உங்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும், வேலை செய்ய ஆரம்பித்தவுடன் மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போதே பாசிட்டிவ் எண்ணங்களுடன் செல்ல வேண்டும்.
நீங்கள் வீட்டில் இருக்கும் கோபத்தை அலுவகத்தில் காட்ட கூடாது, அது உங்கள் பணிகளை பாதிக்கும். அடுத்து முக்கியமாக நீங்கள் வேலையை தொடங்கும் முன் உங்கள் குழு அல்லது சக ஊழியர்களுடன் ஒரு 10 நிமிடமாவது கலந்துரையாடுங்கள். இவை உங்கள் வேலை திறனை மேம்படுத்தவும், இலக்குகளை அடையவும் உதவும்.