குழந்தை பாக்கியம் என்பது பாக்கியங்களில் சிறந்த பாக்கியம் ஆகும். வீட்டில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்துவிட்டால் வீடே குதுகலமாக மாறிவிடும். கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்தவுடனேயே நாம் முதலில் நாடுவது ஒரு நல்ல மகப்பெறு மருத்துவரை தான். இந்த நல்ல மகப்பெரு மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
நட்புடன் பழகுபவர்
பெரும்பாலும் மருத்துவர்கள் நட்புடன் தான் பழகுவார்கள். பிரசவம் என்று வரும் போது நீங்கள் மனம் விட்டு நிறைய சந்தேகங்களை கேட்க வேண்டியிருக்கும் அதனால் உங்களால் யாருடனுடன் நட்புடன் கேள்விகளை கேட்க முடிகிறது என்றும் அவற்றை அவரால் தீர்த்து வைக்க முடியுமா என்றும் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்களுக்கு தகுந்த மருத்துவர்
உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ற மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். உதாரணமாக உங்களுக்கு பிசிஒடி பிரச்சனைகள் இருந்தால், அதில் கைதேர்ந்த மருத்துவரை தேர்ந்தெடுங்கள்.
ஆலோசனை
உங்களுக்கு தகுந்த மருத்துவர்களை பட்டியலிட்ட பின்னர் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவத்தின் படி எந்த மருத்துவர் சிறந்தவர் என பார்த்து அவரை தேர்ந்தெடுங்கள். மற்றவர்களின் முன் அனுபவங்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு கைகொடுக்கும்.
மருத்துவர்
நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என முன்பதிவு செய்யும் நேரத்தில் அவர் உங்களை சந்திக்க தயாராக இருப்பாரா எனவும், அவர் உங்களது அவரச சிகிச்சையை உணர்ந்து நடந்துகொள்வாரா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சந்தேகங்களை மதிப்பவரா?
நீங்கள் மருத்துவரிடம் உடலுறவு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டியிருக்கும், உங்களுக்கு தெரியாத சந்தேகங்களுக்கு அவர் மதிப்பளித்து பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த குணம் இருக்கும் என்றாலும் ஒரு சில மருத்துவர்களிடம் மட்டுமே உங்களால் மனம்விட்டு பேச முடியும். அவ்வாறு உள்ள மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.