பல வகையான கீரை வகைகள் உடலுக்கு பல நன்மைகள் அளிக்கிறது. அந்த வகையில் கரிசலாங்கண்ணி கீரை தொக்கு தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை – 1 கட்டு,
தேங்காய் துருவல் – அரை கிண்ணம்,
நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கிண்ணம்,
உளுந்தம் பருப்பு – 2 சிறிய கரண்டி,
கடலை பருப்பு – 2 சிறிய கரண்டி,
நல்லெண்ணெய் – 3 சிறிய கரண்டி,
கடுகு – அரை சிறிய கரண்டி,
காய்ந்த மிளகாய் – 3,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு கீரைத்தொக்கு
செய்முறை விளக்கம்
முதலில் எடுத்துக்கொண்ட கீரையை நன்றாக கழுவி, இலைகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்க வேண்டும்.
இதன்பின், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை கொட்டி வதக்கிய பின்னர், தேங்காய் துருவலை சேர்த்து கிளறி, கீரையையும் சேர்த்து கிளற வேண்டும்.
இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீரை ஊற்றி வேகவைத்து இருக்க வேண்டும். சுவையான கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு தயார்.