வீட்டில் எங்கு பார்த்தாலும் ஈக்கள் மொய்த்துகொண்டிருந்தால் அதை வெளியேற்றுவது உங்களுக்கு சவாலானதாக இருக்கலாம். ஆனால் இந்த எளிய குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
கோடைக்காலத்தில் மட்டுமே வரக்கூடிய ஈக்கள் இப்போது பரவலாக எல்லா பருவநிலைகளிலும் பார்க்கிறோம். மலம் மீது மொய்க்கும் ஈக்கள் பறந்து சமையலறை மேடை, உணவு, பழங்கள் என்று பலவற்றையும் கிருமி நிறைந்தவையாக மாற்றுகின்றன.
ஈக்கள் ஆபத்தானது அல்ல ஆனால் அவை பல்வேறு நோய்த்தொற்றுகளை பரப்புகின்றன. வீட்டில் ஈக்களை அகற்ற என்ன செய்யலாம். உங்களுக்கான பயனுள்ள இந்த குறிப்புகள் உதவும்.
துளசி ஸ்ப்ரே
துளசி மூலிகைகளின் ராணி. இதன் நறுமணம் ஈக்களுக்கு பிடிக்காத ஒன்று. பழங்களில் மொய்க்கும் ஈக்கள் வீட்டு ஈக்கள் என எல்லாமே துளசியின் நறுமணம் முன்பு ஓடிவிடும். துளசி செடியை வீட்டில் வைப்பதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகம் கிடைப்பதோடு ஈக்களின் தொல்லையும் இல்லாமல் இருக்கலாம்.
துளசி இலைகள் ஒரு கைப்பிடி எடுத்து பாதியை நசுக்கி விடுங்கள். மீதி பாதியை தண்னீரில் சேர்த்து 30 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு இறக்கி குளிரவைத்து நசுக்கிய இலைச்சாறு சேர்த்து வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து பயன்படுத்துங்கள்.