இன்று குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். பெரும்பாலான வீடுகளில் சமைத்த வைத்த உணவுகள் மீதம் ஆகிவிட்டால் அதனை கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கு பிரிட்ஜில் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடும் உணவுகளுக்கு பின்னே என்னென்ன ஆபத்துகள் மறைந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
காய்கறிகளை வைத்து சாப்பிடுவதை விட இறைச்சியை வைத்து சாப்பிடுவதால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் (Deep Freezer) வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடுவதால், இதனை சாப்பிடும் போது இரைப்பையில் நோய்கள் ஏற்படுகின்றது.
சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். அதே நேரத்தில், ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.
இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம். அதுமட்டுமின்றி பல நாட்கள் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும்.
சமைக்காத இறைச்சியை ஒருபோதும் ஒரு நாளை அல்லது இரண்டு நாளைக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.
ஆனால் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் அது சூடாக இருக்கக்கூடாது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது.