25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 617994e8aff
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நீரிழிவு நோயை அடித்து விரட்டும் முருங்கைக்காய் தேநீர்

அதிசக்தி வாய்ந்த உணவு பொருட்களில் முருங்கைக்காயும் ஒன்று. முருங்கைக்காயின் விலையும் குறைவு. முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.

நீரிழிவு நோயாளிகள் முருங்கை தேநீர் பருகினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

முருங்கைக்காயை வைத்து தேநீர் செய்ய முடியும் என்று கூறினால் உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

 

 

முருங்கைக்காய் தேநீர் தயார்ப்பது எப்படி?

முருங்கைக் காயை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த கலவை கொதித்தவுடன் நீங்கள் கலவையை வடிகட்டி அந்த நீரை அருந்தலாம்.

ஆனால் வழக்கமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கவும்.

 

 

முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்…
  1. வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம்.
  2. முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம்.
  3. புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு.
  4. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு.
  5. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு.
  6. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம்.
  7. சர்க்கரை நோயாளிகள், வாரத்துக்கு இரண்டு தடவை கம்பு முருங்கை இலை சேர்த்து உணவு சாப்பிட்டாலே அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும். சர்க்கரைநோய் உண்டாக்கும் சோர்வும் தீரும்.
  8. முருங்கை, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து. முருங்கை சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது.
  9. அவை உடலில் இரத்த ஓட்டத்திற்கு உதவுகின்றன.
  10. அவை இயற்கையான நச்சு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க உதவுகிறது.

Related posts

ருசியான பட்டர் சிக்கன் செய்முறை!

nathan

இந்தியாவை ஏமாற்றி வந்த பெப்ஸி, கோலாவின் பித்தலாட்டம் அம்பலம்!

nathan

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

sangika

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

nathan

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வெந்தயக் கீரை…!!

nathan

புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட்

nathan

டயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்!

nathan

உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

nathan