curry leaves 759
மருத்துவ குறிப்பு

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ….

கறிவேப்பிலை – 200 கிராம்
பச்சை கொத்தமல்லி – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
நல்லெண்ணை – 600 கிராம்
பசுவின் பால் – 200 மில்லி

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
curry%20leaves 759

Related posts

தாங்க முடியாத காது வலியா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

மருமகள்களுக்கு சில அன்பான ஆலோசனைகள்

nathan

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

nathan

மகளிர் தினம் தோன்றிய வரலாறு

nathan

பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்

nathan

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

nathan

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

nathan

ஆஸ்துமாவுக்கு எளிய சித்த வைத்தியம்

nathan

அருமையான பானம்! கொழுப்பை கடகடவென கரைக்கும் அற்புதம்

nathan