24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
27 151
மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? கருப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபட பெண்கள் இத கண்டிப்பா சாப்பிட்டே ஆகனும்!

பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும். தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

குழந்தை
இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை நீங்கள் சாதாரணமான ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு சிகிச்சையளிக்காமல் இருக்க கூடாது. இது குழந்தையின்மைக்கு காரணமாகவும் அமைகிறது. இந்த பகுதியில் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளுக்கான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள்

அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி(Irregular Periods). இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.

வெந்தயம்

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.

துளசி

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம். துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.

ஆளிவிதைகள்

ஆளிவிதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பாகற்காய்

பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.

தேன்
உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படுத்தும்

 

ஓட்ஸ்

ஓட்ஸ்,தினை,முளைக்கீரை, போன்ற ஆண்டி ஆக்ஸிடண்டுகள் (antioxidants) அதிக அளவு கொண்ட உணவுகளை எடுத்து வேண்டும்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு, அரிசி, வெள்ளை சர்க்கரை மற்றும் பாஸ்தா போன்ற எளிய கார்போஹைட்ரேட் தவிர்க்க வேண்டும்.

உளுந்து

தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.

ஹார்மோன் சீராக..

பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.

வெந்தய பொடி

சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவு எடுத்துக்கொள்வதும் நல்லது.

கற்றாழை

மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள பெண்கள் எனில் சோற்றுக் கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை அதிகாலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும்.

சிறிய வெங்காயம்

சிறிய வெங்காயமும் தினசரி 50 கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் PCOD பிரச்சினையை போக்கிட உதவும்.

கீரைகள்

கீரைகள் குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவு. தினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிட சோம்பேறித்தனம் பட வேண்டாம். குறிப்பாக பசலை, முருங்கை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. மகப்பேறுக்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.

முருங்கை கீரை

தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப்பருப்பு இவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினை களைக் குறைக்க கண்டிப்பாக உதவிடும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்

nathan

தடுப்பூசிகள் டாக்டர் என்.கங்கா

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் 1 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் உஷாரா இருங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் சரியாக உண்ணவில்லையென்றால் என்னாகும்?

nathan

மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி?

nathan

குரலில் மாற்றமா? கவனம் தேவை

nathan

பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கா ? சாதாரண பழக்கம் என்று நினைக்க வேண்டாம் …….

nathan