28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl3828
சைவம்

காளான் பிரியாணி

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 1 1/2 கப்,
காளான் – 1 கப் (அலசி சுத்தம் செய்து அரிந்தது),
புதினா – 1/2 கப்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,
உப்பு – தேவைக்கு,
பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் வெட்டவும்),
உருளைக்கிழங்கு – 1 (சதுரமாக வெட்டவும்),
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கரம் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,
பிரியாணி இலை – சிறிது,
மராட்டி மொக்கு – சிறிது, நெய்/
எண்ணெய் தாளிப்பதற்கு.

அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 5,
காய்ந்த மிளகாய் – 3,
கசகசா – 1 டீஸ்பூன் (வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்),
தனியா – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
பட்டை – சிறிது,
ஏலக்காய் – 2,
முந்திரி – 6 (வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்).
இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
எப்படிச் செய்வது?

அரிசியைக் கழுவி நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்/நெய் விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, பிரியாணி இலை, மராட்டி மொக்கு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது போட்டு வதக்கவும். அரிந்த உருளை, காளான் போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு வதக்கவும்.

நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கி விட்டு தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும். அதில் அலசி, ஆய்ந்த புதினாவைப் போடவும். கரம் மசாலாத் தூள் சேர்க்கவும். ஊறிய அரிசியை நீர் வடித்து சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சைச்சாறு விட்டு, மல்லித்தழை தூவி குக்கரை மூடி 1 விசில் விடவும். காளான் பிரியாணி வெந்ததும் இறக்கவும். (சிறு தீயில் விசில் வர வைக்கவும்).
sl3828

Related posts

பன்னீர் மாகன் வாலா

nathan

மஷ்ரூம் ரெட் கறி

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

தேங்காய் பால் பிரியாணி

nathan

கடலை கறி,

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு…!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan