24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

இப்போதெல்லாம் நமது வீட்டருகில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில், உழவர் சந்தைகளில் அல்லது ரோட்டில் தள்ளுவண்டியில் காய்கறிகள் வாங்குவதை விட கண்ணாடி சுவர்களால் அழகூட்டப்பட்டு குளிர் சாதன பெட்டிகளில் பல நாட்களாக உறங்கி கொண்டிருந்த காய்கறிகளை வாங்குவதில் தான் நமக்கு பெருமை மற்றும் கௌரவம் கருதுகிறோம். வானுயர்ந்து நிற்கும் ஷாப்பிங் மால்களில் வாயை பிளந்துகொண்டு அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வருவதில் தான் நமது சந்தோஷம் இப்போது நிரம்பியுள்ளது.

 

உடல்நலத்திற்கு எது நல்லது எது கேட்டது என நாம் யோசிக்க தயாராய் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல பக்காவாக மருத்துவ காப்பீடுகளோடு தயாராக இருக்கிறோம் என்பது தான் சோகமான உண்மை. ஷாப்பிங் மால்களில் குளிர்சாதன பெட்டிகளில் உறைந்து போய் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து உண்பதனால், நமது உடலுக்கு எவ்வளவு கெடுதல்கள் ஏற்படுகிறது என உங்களுக்கு தெரியுமா?

 

கிரிக்கெட் போட்டியில் யார் எத்தனை பந்துகளில், எத்தனை ரன்கள், அதில் எத்தனை 4, 6 என்றெல்லாம் கனக்கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, நாம் தினசரி உட்கொள்ளும் உணவு பொருள்களில் என்னென்ன கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் இருக்கும் இரசாயன கலப்புகளினால் நமது உடலுக்கு என்ன தீங்கு எல்லாம் ஏற்படும் என்று துளி அளவு கூட அக்கறை காட்டுவதும் இல்லை, தெரிந்துக் கொள்வதும் இல்லை. குளிர்சாதன பெட்டிகளில் அடைக்கப்பட்டு வைத்திருக்கும் உணவு பொருட்களை பயன்ப்படுத்துவதன் மூலம், இதய பாதிப்புகள், நீரிழிவு நோய், புற்றுநோய் என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை முழுவதுமாய் தெரிந்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்…

நீரிழிவு நோய்

பெரும்பாலும் உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஸ்டார்ச் எனும் மாவு பண்ட பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் உங்களது உடலில் உள்ள இயற்கை சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. இது உங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்த காரணமாய் இருக்கிறது. பரம்பரை நோய் என்று சொல்லப்பட்டு வந்த நீரிழிவு நோய் சாதாரணமாய் அனைவருக்கும் வரும் நோயாகி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இதய நோய்கள்

உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஹைட்ரஜனேற்ற கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்கு தீங்கான கொழுப்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாய் உங்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

பொதுவாகவே உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக உப்பும், இனிப்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால், உங்களது இரத்தக் கொதிப்பின் அளவு அதிகரிக்கும். இது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புற்றுநோய்

மற்றுமொரு அபாயமான பாதிப்பு என்னெவெனில், புற்றுநோய் பாதிப்பு! பதப்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதனால் கணைய புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாய் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் பாதுகாக்கப்படும் உணவுகளில்எ கொத்தமல்லி மற்றும் ஹார்ட் டாக் உணவுகள் 65 % புற்றுநோய்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மற்ற பாதிப்புகள்

கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க பலவகையான இரசாயனங்கள் உணவோடு சேர்க்கப்படுகிறது இதன் காரணத்தினால், நெஞ்சு வலி, தலை வலி, மயக்கம், குமட்டல், புரை. இதுப்போன்ற உணவுகளை அதிகம் பயன்படுத்துவதனால் சுவாச பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா? இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்…!!

nathan

சூப்பரான மசாலா மோர்

nathan

உங்களுக்கு தெரியுமா நீரிழிவு நோயை அடித்து விரட்டும் முருங்கைக்காய் தேநீர்

nathan

இரும்புச்சத்து நிறைந்த வல்லாரை!

nathan

சிறுநீரகத்தை பாதுகாக்கும் அற்புதமான கிழங்கு இதுதான் கட்டாயம் சாப்பிடுங்கள்!

nathan

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

nathan

21 பகல்கள் தொடர்ச்சியாக பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை . . .

nathan

சப்பாத்தி செய்ய சில டிப்ஸ்… இந்த ஒரே ஒரு பொருள் சேர்த்தாலே போதும்!

nathan

சைவ உணவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?…இந்த 7 நாள் உணவு அட்டவணையை பின்பற்றவும்…

nathan