28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Crab Omelette 1386
ஆரோக்கிய உணவு

சுவையான நண்டு ஆம்லெட் – எப்படி செய்வது?

பல வகையான ஆம்லெட்டை நாம் சாப்பிட்டுருப்போம் ஆனால், நண்டும் ஆம்லெட்டை நீங்கள் சாப்பிடத்துண்டா? சுவையான நண்டு ஆம்லெட் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு 3

நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று,

சின்ன வெங்காயம்- 4

இஞ்சி, பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,

மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்,

சீரகத்தூள், மல்லித்தூள்- ஒன்றரை டீஸ்பூன்,

சோம்புத்தூள், மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை- சிறிதளவு,

உப்பு- தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் நண்டை சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம் இஞ்சி மற்றும் பூண்டு சீரகம் சோம்பு அனைத்தையும், ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

அதன் பின்னர் நண்டு நன்றாக ஆறிய பின் நண்டு துண்டுகளின் சதை பகுதிகளை பிரித்தெடுக்கவும். நண்டு வேகவைத்த தண்ணீரை கிரேவி பதம் வரும்வரை சுண்ட வைக்க வேண்டும்.

அதன்பின் ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு முட்டை, மற்றும் நண்டின் சதைப்பகுதி, 2 டேபிள் ஸ்பூன் நண்டு வேகவைத்த கிரேவி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

மேலும், பின்னர், அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கியதும், தேங்காய் எண்ணெய் விட்டு நண்டு, ஆம்லெட் கலவையை உற்றி இருபுறமும் புரட்டிபோட்டு வேகவைத்து சூடாக எடுத்தால் நண்டு ஆம்லெட் ரெடி!..

 

Related posts

பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

nathan

சுவையான முருங்கைக்கீரை பொரியல்!! பாலூட்டும் பெண்கள் சாப்பிட..!

nathan

நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்!!!

nathan

இரவு நேரத்தில் இந்த உணவுகளை தப்பி தவறிக்கூட சாப்பிடாதீங்க.. தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலுக்கு மட்டுமல்ல, நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது செவ்வாழைப்பழம் !!

nathan

உங்களுக்கு ஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஆற்காடு… தலசேரி… மலபார்… திண்டுக்கல்… பிரியாணி உடல்நலத்துக்கு நல்லது… எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan