29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
water weight 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு நீர் உடம்பா? குறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

உடல் எடையைப் பராமரிப்பது என்பது சற்று கடினமான ஒன்று. அதுவும் ஒருவரது உடல் பருமனுக்கான காரணம் என்னவென்று தெரியாவிட்டால், மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கும். பலரும் உடல் பருமனுக்கு அதிகப்படியான கொழுப்புத் தேக்கம் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உடல் பருமனுக்கு கொழுப்புக்கள் மட்டுமின்றி, நீரும் ஓர் காரணம்.

ஒருவருக்கு இருப்பது நீர் உடம்பு என்பதை, மணிக்கட்டு மற்றும் கணுக்காலைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். இந்த பகுதிகள் வீங்கி காணப்பட்டால், உங்களுக்கு இருப்பது நீர் உடம்பு என்று அர்த்தம். கொழுப்புக்களால் உடல் பருமனடைந்திருந்தால், உடலின் பல்வேறு பகுதிகளான கைகள், வயிறு, இடுப்பு போன்ற பகுதிகள் தொங்குவது போன்று காணப்படும். ஒருவருக்கு கொழுப்பு உடம்பு இருந்தால், அதைக் குறைக்க சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் நீர் உடம்பை ஒருசில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் விரைவில் குறைத்துவிடலாம். நீர் உடம்பு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான டயட், தூக்கமின்மை மற்றும் சில வகை நோய்கள் குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப காலத்தில் அடிக்கடி நீர்க்கோர்வையால் அவஸ்தைப்படுவார்கள்.

நீர் உடம்பு கொண்டவர்கள் மந்தமாகவும், மிகவும் அசௌகரியமாகவும் உணர்வார்கள் மற்றும் இது அவர்களது தோற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். இப்போது நீர் உடம்பு கொண்டவர்கள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் உடல் எடையைக் குறைக்க உதவும் சில இயற்கை வழிகள் குறித்து காண்போம்.

உப்பைக் குறைக்கவும்

உப்பில் உள்ள சோடியம், உடலில் நீரைத் தேங்கச் செய்யும். அதிகளவு உப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் உடலில் நீர் தேக்கம் அதிகம் இருக்கும். அத்துடன் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் குறைந்த அளவிலான நீரைக் குடித்தால், அவர்களுக்கு நீர் உடம்பு வருதவற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதைத் தவிர்க்க உண்ணும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

தற்போது பெரும்பாலானோருக்கு சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது. சர்க்கரையை ஒருவர் அதிகம் சாப்பிட்டால், அது இன்சுலின் அளவை அதிகரித்து, உடலில் இருந்து சோடியத்தை வெளியேற முடியாமல் செய்து, நீர்த் தேக்கத்தை உண்டாக்கும். ஆகவே நீர் உடம்பைக் குறைக்க வேண்டுமானால், சர்க்கரை நிறைந்த உணவுகளுக்கு குட்-பை சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சி அவசியம்

நீர் உடம்பைக் குறைக்க ஓர் அற்புதமான வழி உடற்பயிற்சி. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், வியர்வையின் வழியாக உடலில் உள்ள அதிகப்படியான நீர் நேரடியாக வெளியேறிவிடும். எனவே நன்கு வியர்க்கும் படி உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். முக்கியமாக உடற்பயிற்சியின் போது நீர் குடிக்க மறக்க வேண்டாம். வியர்வையின் மூலம் அளவுக்கு அதிகமாக நீரிழப்பு ஏற்பட்டு, உடல் வறட்சி உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தூக்கம் முக்கியம்

மோசமான தூக்கம் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கும். ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் சோடியத்தின் அளவு மற்றும் நீர்ச்சத்தின் அளவு மோசமாக பாதிக்கப்படும். மேலும் தூக்கத்தின் போது உடல் டாக்ஸின்களை வெளியேற்றும். எனவே உங்களது நீர் உடம்பை குறைக்க நினைத்தால், உடலுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக ஒரு நாளைக்கு 8 மணிநேர தூக்கத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தம் ஒருவருக்கு அதிகரிக்கும் போது, உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும். கார்டிசோல் ஆன்டி-டையூரிக் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, நேரடியாக நீர்த் தேக்க அளவையும் அதிகரிக்கும். எனவே ஒருவர் அன்றாடம் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். மன அழுத்தம் குறைந்தால், நீரால் பருமனடைந்த உடலின் எடை குறைந்து, சந்தோஷமான வாழ்க்கைக்கு உதவும்.

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களின் அளவு பாதிக்கப்பட்டாலும், உடலில் நீர் தேங்க ஆரம்பிக்கும். எனவே ஆரோக்கியமான உடல் எடைக்கு, ஒருவர் கட்டாயம் அனைத்துவிதமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த சத்துக்கள் உங்களது டயட்டில் இல்லாமல் இருந்தால், சப்ளிமெண்ட்டுகளை எடுக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட்டுகள்

எலக்ட்ரோலைட்டுகளான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உடலில் நீரின் அளவைப் பராமரிக்க முக்கியமானவைகளாகும். இச்சத்துக்கள் உடலில் குறைவாக இருந்தால், அது உடலில் நீர்ச்சத்தின் அளவில் ஏற்றஇறக்கத்தை ஏற்படுத்து, நாளடைவில் உடலில் நீர்த்தேக்கத்தை உண்டாக்கிவிடும். உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவு என்பது ஒருவர் குடிக்கும் நீரைப் பொறுத்தது. அதிகளவு நீரைக் குடித்தால், அதிகளவு எலக்ட்ரோலைட்டுகள் தேவைப்படும்.

அதிக நீர் குடிக்கவும்

நீர் உடம்பு கொண்டவர்களிடம் அதிக நீர் குடிக்கவும் என்று சொல்வது உங்களுக்கு சிரிப்பாகத் தான் இருக்கும். ஆனால் அதிகளவு நீர் குடித்தால், அது உண்மையிலேயே நீர் உடம்பைக் குறைக்க உதவும். உடல் வறட்சியடைந்து இருக்கும் நிலையில், நீரை தேக்கி வைக்க முயற்சிக்கும். அதுவே அடிக்கடி நீரைக் குடித்து வந்தால், உடல் நீரைத் தேக்கி வைக்கும் வாய்ப்பு குறைந்து, நீர் உடம்பும் குறைய ஆரம்பிக்கும்.

கார்போஹைட்ரேட்டுக்களைக் குறைக்கவும்

நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளானது க்ளைகோஜெனாக உடலில் தேக்கி வைக்கப்படும். க்ளைகோஜெனானது அத்துடன் நீரையும் தேக்கி வைக்கும். ஆகவே நீர் உடம்பை குறைக்க நினைத்தால், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறைவான கார்போஹைட்ரேட், இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவி, நீர் உடலைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உண்ணும் உணவை கவனமாக தேர்ந்தெடுக்கவும்

குறிப்பிட்ட உணவுகள் நீர் உடம்பைக் குறைக்க உதவி புரியும். அதுவும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், பச்சை இலைக் காய்கறிகள், தயிர், அவகேடோ போன்றவை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் மக்னீசியம் நிறைந்த உணவுகளும் நீர் உடம்பைக் குறைக்கும். இந்த மக்னீசியம் சத்தானது டார்க் சாக்லேட், நட்ஸ் மற்றும் முழு தானியங்களில் அதிகம் இருக்கும். ஆகவே இந்த உணவுகளையும் அடிக்கடி உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்ன நண்பர்களே! உங்கள் நீர் உடம்பைக் குறைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் எளிமையாக உள்ளதா? உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருப்பது போன்று தோன்றினால், இதை நீங்கள் மட்டும் படிக்காமல், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா வீறிட்டு அழுது கொண்டே குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

nathan

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

nathan

30 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து அதிசயிக்கத்தக்க வகையில் மாறிய நால்வர்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்பிற்கு எது சிறந்தது?

nathan

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

nathan

வீட்டில் செடிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நீண்ட நாள் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு

nathan

தயங்க வேண்டாம் பெண்களே! உரக்கச் சொல்லுங்கள்!..உள்ளாடையின் முக்கியத்துவத்தை

nathan