25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pepperpowder 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் மிளகுத் தூளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நம் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஓர் பொருள் தான் மிளகு. இந்த மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள் தான், இதற்கு தனித்துவமான சுவையைத் தருகிறது. மேலும் மிளகில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, ஜிஙக், குரோமியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற பல்வேறு சத்துக்களும் அடங்கியுள்ளன.

பெரும்பாலும் மிளகுப் பொடியானது உணவை சமைத்து முடித்த பின்பு தான் தூவ வேண்டும். இல்லாவிட்டால், அது மிகவும் சூடான எண்ணெய்கள், அதன் சுவையை ஆவியாக்கி ப்ளேவரையே போக்கிவிடும். இத்தகைய மிளகுத் தூள் சூப்கள், அசைவ உணவுகள் போன்றவற்றின் மீது தூவி சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த மிளகுத் தூளை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

உங்களுக்கு ஒருவர் மிளகுத் தூளை அன்றாட சமையலில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிளகுத் தூளின் சில முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும்

மிளகில் உள்ள பெப்பரைன், வைட்டமின் ஏ, சி, செலினியம், பீட்டா-கரோட்டீன் போன்றவற்றை உறிஞ்ச உதவும். மேலும் பெப்பரைன் குடலில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, ஊட்டச்சத்து பொருட்களை வளர்சிதை மாற்றம் செய்ய உதவுகிறது. மேலும் இது செல்களில் இருந்து பொருட்கள் வெளியேறுவதைத் தடுக்கும் மற்றும் குடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.

செரிமானம் மேம்படும்

மிளகு சுவை மொட்டுக்களைத் தூண்டிவிடுவதோடு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரித்து, முறையான செரிமானத்திற்கு உதவும். பெரும்பாலான செரிமான பிரச்சனைகள் ஹைட்ரோகுளோரிக் அமில குறைபாட்டினால் அல்லது அதிகப்படியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் வருபவைகளாகும். மிளகு செரிமானம் சிறப்பாக நடைபெறச் செய்வதால், வயிற்று வலி, வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், குடல் நோய்களை சரிசெய்ய உதவும்.

பசியைத் தூண்டும்

மிளகு உணவின் சுவையை மேம்படுத்துவது மற்றும் செரிமானத்தை சீராக்குவது மட்டுமின்றி, பசியின்மையை சரிசெய்யும் உதவுகிறது. உங்களுக்கு பசி உணர்வே இருப்பதில்லையா? அப்படியனால் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், உங்களுக்கு இருந்த பசியின்மை பிரச்சனை நீங்கும்.

எடை குறைவு

உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அதற்கு மிளகு பெரிதும் உதவியாக இருக்கும். மிளகின் மேல் புறத்தில் பைட்டோ நியூட்ரியண்ட் என்னும் கொழுப்புச் செல்களை உடைத்தெறியும் பொருள் உள்ளது. எடையைக் குறைக்க விரும்புவோர், இத்தகைய மிளகை பொடி செய்து அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். மேலும் மிளகில் சிறுநீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி சிறுநீர் கழிக்கும் போது உடலில் இருந்து டாக்ஸின்கள் மற்றும் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும்.

வாய்வு தொல்லை

மிளகில் வயிற்று உப்புசத்தைப் போக்கும் பண்புகள் உள்ளதால், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிப்பதோடு, வாய்வு உருவாக்கத்தையும் தடுக்கும்.

* ஏற்கனவே வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், உணவில் மிளகாய் தூளுக்கு பதிலாக, மிளகுத் தூளை சேர்த்து வருவது நல்ல நிவாரணத்தை வழங்கும்.

* அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட, 1 டம்ளர் மோரில் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து குடிக்க சரியாகும்.

* வாய்வு வலியால் கஷ்டப்படுபவர்கள், ஆலிவ் ஆயிலில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதன் மூலம் விடுபடலாம்.

நெஞ்சு சளி நீங்கும்

மிளகு மூக்கடைப்பு மற்றும் நெஞ்சு சளியை இளகச் செய்ய உதவும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து தினமும் 2-3 வேளை குடித்து வர, சுவாச மண்டலம் சுத்தமாகும்.

* இல்லாவிட்டால் சுடுநீரில் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து ஆவி பிடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

* சைனஸ் சுரப்பியை சுத்தம் செய்ய வேண்டுமானால், நல்லெண்ணெயில் மிளகுத் தூள் சேர்த்து, அதனை உள்ளிழுங்கள். இதனால் தும்மல் வரக்கூடும். ஆனால் சைனஸ் சுரப்பி சுத்தமாகிவிடும்.

ஆர்த்ரிடிஸ்

பெப்பரைன் நிறைந்த மிளகு, ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை சரிசெய்ய உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆர்த்ரிடிக் பண்புகள் உள்ளன. உடலில் மோசமான இரத்த ஓட்டம் இருந்தால் தான் மூட்டு வலிகள் வரும். ஆனால் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முட்டு வலியைக் குறைத்து தடுக்கும். ஆராய்ச்சியாளர்களும் மிளகு நாள்பட்ட வலியைக் குறைப்பதோடு, ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளையும் குறைப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோயைத் தடுக்கும்

மிளகுத் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயை எதிர்த்துப் போராடும். குறிப்பாக இது குடல் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோயை எதிர்த்து நல்ல பாதுகாப்பளிக்கும்.

மன அழுத்தத்தைப் போக்கும்

மிளகில் உள்ள பெப்பரைன், செரடோனின் உற்பத்தியை அதிகரித்து, மனஇறுக்க நிவாரணியாக செயல்படும். செரடோனின் என்பது மனநிலையை சீராக வைத்துக் கொள்ளும் ஓர் நரம்புகடத்திப் பொருள். ஒருவரது உடலில் செரடோனின் அளவு குறைவாக இருந்தால், அது மன இறுக்கத்தை உண்டாக்கும். மேலும் பெப்பரைன் மூளையில் பீட்டா எண்டோர்பின்களை அதிகரித்து, குழப்பமின்றி தெளிவாக செயல்பட செய்யும். எண்டோர்பின்கள் இயற்கை வலி நிவாரணியாக செயல்படும். மேலும் இந்த எண்டோர்பின்கள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

பற்கள் மற்றும் ஈறு பிரச்சனைகள்

மிளகுத் தூளை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, ஈறுகளில் உள்ள அழற்சி நீங்கி, வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைக் குறைக்கும்.

* உப்பு மற்றும் மிளகுத் தூளை சரிசம அளவில் ஒன்றாக எடுத்து, நீர் சேர்த்து கலந்து, ஈறுகளில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

* பல் வலி இருந்தால், ஒரு சிட்டிகை மிளகுத் தூள் எடுத்து கிராம்பு எண்ணெய் சேர்த்து கலந்து, வலியுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பலா பழத்தை இப்படியெல்லாம் சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து?

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் சாப்பிட கூடாதவைகளும் சாப்பிட வேண்டியவைகளும்…!!

nathan

இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா இனிப்பு போளி செய்வது எப்படி?

nathan

சுடச் சுட வெங்காய சட்னி! இனி இப்படி செய்து ருசியுங்கள்

nathan

கட்டாயம் இதை படியுங்கள்.. வளர் இளம்பருவத்தினரைக் கொண்ட குழந்தைகள் வீட்டில் அப்படி என்னென்ன ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

nathan

லாலி பாப் சிக்கன்

nathan

புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் காய்கறிகள்

nathan

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!

nathan