24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
10 beans potato avial
சமையல் குறிப்புகள்

சூப்பரான பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியல்

தினமும் ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இன்று பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு அவியல் செய்து சாப்பிடுங்கள். இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இதனை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்வதால், இதன் சுவை தனித்து இருக்கும்.

சரி, இப்போது அந்த பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Beans Potato Avial
தேவையான பொருட்கள்:

பீன்ஸ் – 15 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளிச்சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அதில் பீன்ஸ், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குறைவான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அதே சமயம் மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்து வைத்துள்ளதை காய்கறியுடன் சேர்த்து கிளறி, புளிச்சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பிறகு மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, காய்கறியுடன் நேர்த்து கிளறினால், பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியல் ரெடி!!!

Related posts

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

சுவையான சுரைக்காய் பொரியல்

nathan

கருப்பு எள் தீமைகள்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ

nathan

சுவையான பூண்டு சிக்கன் சாதம் செய்வது எப்படி?

nathan

சுவையான காளான் மஞ்சூரியன்

nathan

பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

nathan

சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி

nathan