நாம் சமைக்கும் உணவினை இறுதியில் சுவையையும், மணத்தையும் கூட்டுவதில் கொத்தமல்லி இலை அதிகமாக பயன்படுகின்றது.
ஆனால், நாம் கடையிலிருந்து வாங்கி வரும் கொத்தமல்லி சில மணி நேரத்திற்கெல்லாம் வாடி விடுவதுடன், விரைவில் அழுக தொடங்கிவிடும். அவ்வாறு கெட்டுப்போகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- கொத்தமல்லியை பலரும் கழுவி அதனை பிரிட்ஜில் வைப்பார்கள். இவ்வாறு வைக்கப்படும் கொத்தமல்லி ஒரே நாளைக்குள் கெட்டுப்போய் விடும்.
- மேலும் கொத்தமல்லியை கழுவிய உடனையே நாம் உணவிற்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது ஒரு மூலிகை. ஆகவே இனிமேல் உபயோகிக்கும் முன்பு கழுவினால் போதுமானது.
- தண்டுகளை வெட்டாமல் கொத்தமல்லியை பத்திரப்படுத்தக்கூடாது. ஏனெனில் தண்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சீக்கிரம் கெட்டுப்போய் விடும்.
- ப்ரிட்ஜில் நீங்கள் கொத்தமல்லியை வைக்கும் போது அதனை திறந்து வைத்தாலும் சில மணிநேரத்தில் வாடி சீக்கிரம் கெட்டுப்போய்விடும்.
- ஒரு வாரத்திற்கும் செடியில் பறித்து வைத்தது போன்று ப்ரஷாக இருக்க விரும்பினால், கொத்தமல்லி இலையை காகிதத்தில் போர்த்தி காற்று புகாதா டப்பாவில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது.
- ஆனால் அவ்வப்போது அதன் ஈரப்பதத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் அடைக்கும் டப்பாவில் சிறிது ஈரப்பதம் இருந்தாலும் கொத்தமல்லி இலை கெட்டுப் போய்விடும். ஆகவே இந்த தவறுகளை தவிர்த்தால் ப்ரஷ்ஷான கொத்தமல்லி இலை எப்போதும் உங்க வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.