27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tomato chutney
சட்னி வகைகள்

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி?

பொதுவாக தக்காளி சட்னி என்றாலே வெங்காயம் கட்டாயம் சேர்த்து வைப்பார்கள். ஆனால் இந்த சட்னி வெங்காயம் பூண்டு கூட தேவைப்படாமல் சுவையாக வைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வர மிளகாய் – 10, தக்காளி – 6, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை விளக்கம்

முதலில் 10 லிருந்து 12 வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு தகுந்தாற் போல் எடுத்துக் கொள்ளுங்கள். குண்டு மிளகாய் எடுக்கக் கூடாது அது அதிகம் காரம் தரும். நீளமாக இருக்கும் காய்ந்த மிளகாயை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அப்படியே போட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக நைசாக அரை படாது. எனவே அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தக்காளி பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் காம்பு பகுதியை மட்டும் நீக்கி நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இதில், மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகாய் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விட்டு மிளகாயை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெட்டி வைத்த தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

மேலும், கடுகு பொரிந்து வந்ததும் அதில் கறிவேப்பிலையை உருவி போட்டு தாளியுங்கள். பின்னர் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள்.

அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்து வந்தால் தான் பச்சை வாசம் போகும். எண்ணெய் மேலே தெளிந்து பச்சை வாசனை போன பின்பு அடுப்பை அனைத்து விட வேண்டியது தான்.

அவ்வளவு தான் ரொம்ப ரொம்ப சுலபமாக கெட்டியான இந்த காரசாரமான தக்காளி சட்னி இட்லி, தோசை, உப்புமாவுக்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, பூரிக்கு கூட தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கும்.

Related posts

வெங்காய சட்னி

nathan

சுவையான தேங்காய் சட்னி வீட்டிலேயே செய்யலாம்….

nathan

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

nathan

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

nathan

மாதுளம் சட்னி

nathan

முட்டைக்கோஸ் சட்னி

nathan

செளசெள சட்னி!

nathan

கத்தரிக்காய் சட்னி

nathan

புதுமையான முள்ளங்கி சட்னி!!

nathan