25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 616ffe
சமையல் குறிப்புகள்

கெட்டுப்போன பாலை வீசிடாதீங்க…! சுவையான கேக் செய்யலாம்…

பால் ஒரு ஆரோக்கியமான பானம். தினமும் காலையில் எடுத்து கொண்டால் அன்றைய நாளுக்கான முழு சக்தியும் கிடைத்து விடும்.

நம்மில் நிறைய பேர் பால் திரிந்து போகும் நிலையில் இருந்தால் உடனே தூக்கி வீசி விடுவோம்.

இந்த கெட்டுப்போகும் பாலை வைத்து அருமையான இனிப்புகளை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

இனி பால் திரிந்து போகும் நிலையில் இருந்தால் இந்த பால் கேக்கை செய்து ருசியுங்கள்.

 

பால் கேக் செய்ய தேவையான பொருட்கள்

பால் – ½ கப்
சுத்திகரிக்கப்பட்ட மாவு – 2 கப்
பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன்
தண்ணீர் – ½ கப்
வெண்ணை – 3 தேக்கரண்டி
முட்டை – 01
செய்முறை
கெட்டுப்போன பாலை வைத்து சுவையான பால் கேக்கை தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 கப் சுத்திகரிக்கப்பட்ட மாவு சேர்த்து, ½ டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 4 தேக்கரண்டி தூள் சர்க்கரை சேர்க்கவும்.

மேலும் உலர் திராட்சை மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய நட்ஸ் போன்றவற்றை சேர்க்கவும்.

இப்போது, ½ கப் பால் மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

தனியாக ஒரு பவுலில் 3 தேக்கரண்டி வெண்ணெயுடன் ஒரு முட்டையை நன்கு பீட் செய்து கொள்ளவும்.

முட்டை கலவையை மாவுடன் சேர்த்து, அனைத்து பொருட்களையும் கலக்கி விடுங்கள். இந்த கலவையை வெண்ணை தடவப்பட்ட பேக்கிங் தட்டில் ஊற்றி 300 டிகிரி செல்சியஸில் 25 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.

அவை நன்கு பேக் ஆனதும், தேவையக்கேற்ப சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.

Related posts

பொரி அல்வா

nathan

ரொட்டி வடை செய்வது எப்படி? ருசியான ரெசிபி!!

nathan

சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி

nathan

அரிசி மாவுடன் இதைச் சேர்த்தால் கிரிஸ்பி தோசை ரெடி

nathan

சுவையான சிக்கன் டிக்கா மசாலா

nathan

மலபார் மட்டன் ரோஸ்ட்

nathan

பெண்களுக்கான சமையல் குறிப்புக்கள்

nathan

சுவையான சேமியா உப்புமா

nathan

சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல்

nathan