29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
weightloss
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இருந்தாலும் என்ன செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையவே குறையாது. உடல் எடையை ஒருவர் நினைத்ததுமே குறைத்துவிட முடியாது. அதிலும் இயற்கையாகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் இருந்து, உடல் எடையைக் குறைக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

18 Simple And Surprising Ways To Lose Weight
அதோடு அன்றாடம் ஒருசில சின்ன சின்ன விஷயங்களை மேற்கொள்வதாலும், உடல் எடையைக் குறைக்கலாம். உங்களுக்கு இந்த செயல்களை எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இதனால் பக்கவிளைவுகள் எதையும் சந்திக்காமல், ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கலாம்.

சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க அன்றாடம் செய்ய வேண்டிய சில சின்ன சின்ன செயல்கள் என்னவென்று காண்போம். அதைப் படித்து பின்பற்றி, நன்மைப் பெறுங்கள்.

க்ரீன் டீ குடிக்கவும்

க்ரீன் டீயில் உள்ள ப்ளேவோனாய்டுகள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் காப்ஃபைன் போன்றவை உடல் எடையைக் குறைக்க ஆதரவளிக்கும். காஃப்பைன் உடலின் மெட்டபாலிச செயல்பாட்டை மேம்படுத்தும். அதோடு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ளேவோனாய்டுகளான கேட்டசின்கள், உணவுகளில் இருந்து கொழுப்புக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும். முக்கியமாக க்ரீன் டீ குடிப்பதாக இருந்தால், அதில் சர்க்கரை, பால் என்று எதையும் சேர்க்கக்கூடாது.

இஞ்சி துண்டு சாப்பிடவும்

தினமும் சில துண்டுகள் இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி பவுடரை சாப்பிட வேண்டும். இஞ்சி உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இப்படி உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவியாக இருக்கும். மேலும் இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை 20 சதவீதம் அதிகமாக்கும். இதனால் உடலின் கலோரிகளும் எரிக்கப்படும். அதுமட்டுமின்றி, இஞ்சி பசியைக் கட்டுப்படுத்தி, அதிகளவு கலோரி எடுப்பதைத் தடுப்பதோடு, விரைவில் வயிற்றை நிரப்பவும் செய்யும்.

பட்டை மற்றும் தேன் பானத்தைக் குடிக்கவும்

பட்டை உடலில் க்ளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவும். அதே சமயம் தேன் உடலின் மெட்டபாலிச செயல்பாட்டை வேகமாக்கும். ஆகவே தினமும் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் அல்லது ஒரு துண்டு பட்டைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, தேன் கலந்து, குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடை குறைய பெரிதும் உதவியாக இருக்கும்.

உணவில் மிளகுத் தூளை தூவி சாப்பிடவும்

மிளகு மிகவும் பிரபலமான ஓர் மசாலாப் பொருள். இது கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும். மிளகில் உள்ள பெப்பரைன் என்னும் உட்பொருள், மிளகிற்கு தனித்துவமான சுவையைக் கொடுப்பதோடு, புதிய கொழுப்புச் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். அதோடு மிளகு உடலின் மெட்டபாலிச விகிதத்தை அதிகரிக்க உதவும். ஆகவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவுகளின் மீதும் மிளகுப் பொடியைத் தூவி சாப்பிடுங்கள்.

மஞ்சள் கலந்த பால் குடிக்கவும்

மசாலா பொருட்களுள் ஒன்றான மஞ்சள் பொடி உடலின் கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும். மேலும் மஞ்சள் உடலை சுத்தம் செய்யும் அற்புதமான பொருளும் கூட. இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் கொழுப்புக்களை உடைக்க உதவும் மற்றும் கொழுப்பை உறிஞ்சாமல் தடுக்கும். அதோடு இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து, க்ளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். தினமும் ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

ஆப்பிள் சீடர் வினிகர் டானிக்

உடல் எடையை இயற்கையான வழியில் குறைக்க நினைத்தால், 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து தினமும் குடித்து வாருங்கள். இதனால் பசி கட்டுப்படுத்தப்படுவதோடு, சர்க்கரை வளர்சிதை மாற்ற செயல்முறை சீராக்கப்பட்டு, உடல் எடை குறைய உதவும். மேலும் இந்த பானம், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்.

சமையலில் பச்சை மிளகாய் சேர்க்கவும்

உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வேண்டுமானால், சமைக்கும் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் பச்சை மிளகாய் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும்.

பால் குடிக்கவும்

பால் குடித்தால் உடல் எடை குறையும் என்பது தெரியுமா? ஆய்வு ஒன்றில், பாலைக் குடித்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வேகமாக வெளியேறுவதாக தெரிய வந்துள்ளது. பாலில் உள்ள கால்சியம், தேவையற்ற கொழுப்புக்களை உடலில் இருந்து நீக்க உதவும் மற்றும் இதில் உள்ள வைட்டமின் டி, ஆரோக்கியமான உடல் எடையைக் பராமரிக்க உதவும்.

காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கவும்

எலுமிச்சை ஜூஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் பானம் என்பது அனைவரும் அறிந்ததே. எலுமிச்சை ஜூஸ் உலை சுத்தம் செய்யும் செயல்பாட்டை வேகப்படுத்தும். உடலில் அதிகளவு டாக்ஸின்கள் சேர்ந்தால், உடலின் மெட்டபாலிசம் மெதுவாக நடைபெறும். ஆனால் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதால், உடலினுள் சுத்தப்படுத்தும் செயல்முறை தூண்டிப்பட்டு, உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, மெட்டபாலிசம் மேம்பட்டு, உடல் எடை வேகமாக குறையும். மேலும் எலுமிச்சை ஜூஸ் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, கலோரி அளவையும் குறைக்கும்.

சமையலில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தவும்

ஆலிவ் ஆயில் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று. ஆய்வு ஒன்றில், நறுமணமிக்க ஆலிவ் ஆயில் பசியைக் கட்டுப்படுத்துவது தெரிய வந்தது. அதுவும் இந்த எணணெய் உடலில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டி, விரைவில் வயிறு நிறையச் செய்யும். ஆகவே இயற்கையாகவே குறைவான அளவில் கலோரிகளை எடுக்க நினைத்தால், சமையலில் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடுகு பேஸ்ட்டை பயன்படுத்தவும்

கடுகு நறுமணமிக்க மற்றும் சுவையான பொருள் மட்டுமின்றி, இயற்கையாகவே கொழுப்பைக் கரைக்கும் உணவுப் பொருளும் கூட. இதில் உள்ள ஐசோதியோசையனேட் என்னும் கெமிக்கல், எபிட்ரைன் என்னும் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டிவிடும். 20 கிராம் கடுகில், உடலின் கொழுப்பைக் கரைக்கும் திறனை 20 சதவீதம் அதிகமாக்கும்.

தினமும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உட்கொள்ளவும்

சமீபத்திய ஆய்வு ஒன்றில், தேங்காய் எண்ணெய் கொழுப்பைக் கரைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். மேலும் இது உடலின் ஆற்றலை மேம்படுத்தி, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைத் தூண்டிவிடும். ஒருவரது உடலில் தைராய்டு சுரப்பி சரியாக செயல்பாடாமல் இருந்தால், மெட்டபாலிசம் மெதுவாக நடைபெறும். ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்து வர, உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிப்பதோடு, தக்க வைக்கவும் உதவும்.

காலை உணவாக முட்டை சாப்பிடவும்

ஆய்வு ஒன்றில், காலை உணவாக செரில் சாப்பிடுபவர்களை விட, உடல் பருமன் கொண்டவர்கள் முட்டையை காலை உணவாக சாப்பிடும் போது உடல் எடை அதிகமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஏனெனில் முட்டையில் உள்ள புரோட்டீன், நீண்ட நேரம் வயிற்றை நிரப்புவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வையும் தடுக்கும்.

ஒரு பௌல் ஓட்ஸ் சாப்பிடவும்

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் மிகச்சியந்த உணவு. ஓட்ஸில் மற்ற செரில்களை விட நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரோட்டீனும் ஏராளமான அளவில் உள்ளது. இதை உட்கொண்டால், பசி கட்டுப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

பூண்டு மற்றும் எலுமிச்சை பானம்

தினமும் 2 பல் பூண்டு சாப்பிட்ட பின், உடனே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும். ஆய்வு ஒன்றில் பூண்டு உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் மற்றும் உணவுகளில் இருந்து க்ளுக்கோஸ் உறிஞ்சுவதைக் குறைக்கும் என தெரிய வந்துள்ளது. மேலும் பூண்டு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் பொருளும் கூட. எலுமிச்சை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றும்.

ஸ்நாக்ஸாக ஆளி விதை சாப்பிடவும்

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்த ஸ்நாக்ஸாக ஆளி விதை இருக்கும். இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இந்த நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதோடு, குடலியக்கத்தை சிறப்பாக செயல்படச் செய்யும். இதனால் குடலில் இருந்து எளிதாக டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறும். மேலும் இதில் உள்ள லெசிதின் என்னும் பொருள், செரிமான பாதையில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை நீக்க உதவும்.

போதுமான நீர் குடிக்கவும்

உடல் வறட்சி உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கும். ஆகவே உடலின் மெட்டபாலிசத்தை சீரான அளவில் வைத்துக் கொள்ள, தினமும் போதுமான நீரைக் குடியுங்கள். மேலும் தண்ணீர் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் மற்றும் உடற்பயிற்சிக்குப் பின் தசைகளில் ஏற்பட்ட காயங்களைத் தடுக்க உதவும். அதோடு தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரைக் குடித்தால், உட்கொள்ளும் கலோரியின் அளவு குறைந்து, விரைவில் வயிறும் நிரம்பிவிடும்.

இரவு உணவாக தக்காளி சாப்பிடவும்

ஜப்பானிய ஆராச்சியாளர்கள், இரவு நேரத்தில் தக்காளியை சாப்பிட்டால், அது உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர். தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொழுப்புத் திசுக்களின் உருவாக்கத்தைத் தடுத்து, உடல் எடை அதிகரிப்பதைக் குறைப்பதாகவும் கூறுகின்றனர்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தொப்பையை குறைக்கனுமா? அப்போ தினமும் காலையில் இந்த பானங்களை குடிங்க

nathan

பெண்கள் திருமண மோதிரத்தை இடது கையில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்

nathan

கர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!

nathan

காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்?

nathan

எக்ஸாம் வந்தாலே மண்டை குடையுதா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

மும்பையில் அமிதாப் பச்சனின் மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்த ஸ்டேட் பாங்க்…

nathan

உங்களுக்கு தெரியுமா செல்போனுக்கு அடிமையாக இருப்பதை விட்டொழிப்பது எப்படி?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் மாதவிடாய் உயிரை எடுக்கும் வயிற்று வலியை குறைக்க.!

nathan