oconut milk tomato rice SECVPF
சமையல் குறிப்புகள்

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேங்காய் பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் அருமையாக இருக்கும்.

அந்தவகையில் எப்படி இந்த ரெசிபி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி – அரை கப்,

பச்சரிசி – 2 கப்,

தேங்காய்ப் பால் – 2 கப்,

வெங்காயம் – 1

தக்காளி – 6,

பச்சை மிளகாய் – 2,

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,

நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

முதலில் அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

அடுத்து தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

பின்னர், கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள். புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.

Related posts

மெத்தி சிக்கன் குழம்பு

nathan

சில்லி மஸ்ரூம்

nathan

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

செட்டிநாடு இட்லி பொடி

nathan

சுவையான ஆரோக்கியத்தைத் தரும் ராகி தோசை

nathan

சுவையான தக்காளி வெங்காய கொஸ்து

nathan

சுவையான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

nathan