29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 flakyscalp
தலைமுடி சிகிச்சை

உங்கள் உச்சந்தலையில் பருக்கள் உள்ளதா? இதோ எளிய நிவாரணம்

உங்களுக்கு தலையில் பருக்கள் இருக்கிறதா? ஆம், பருக்கள் முகத்தில் மட்டும் உண்டாவதல்ல. அவை உச்சந்தலையில் கூட உண்டாகலாம். உச்சந்தலையில் பருக்கள் உண்டாவதற்கான அடிப்படைக் காரணம் மோசமான கூந்தல் பராமரிப்பு வழிமுறைகள் ஆகும். இது தவிர வேறு சில காரணங்களும் உச்சந்தலையில் பருக்கள் தோன்றுவற்கு காரணமாக உள்ளன.

சில நேரங்களில் ஒன்றிரண்டு பருக்கள் மட்டுமே தோன்றிய நிலையில் அவற்றில் இருந்து வெளிவரும் சீழ் மற்ற இடங்களில் பரவி இன்னும் அதிக பருக்களுக்கு வழிவகுக்கும். மற்ற இடங்களில் தோன்றும் பருக்கள் போலவே, தலைமுடியின் வேர்க்கால்கள், உச்சந்தலையில் உள்ள சீபம் என்னும் எண்ணெய்த்தன்மையுடன் ஓட்டும் போது பருக்கள் தோன்றுகிறது.

 

சீபம் என்பது சருமத்திற்கு ஈரப்பதத்தை நிர்வகிக்க உதவும் ஒரு சரும எண்ணெயாகும். முடி வேர்கால்களின் துளைகளுக்குள் பாக்டீரியா மற்றும். பூஞ்சை நுழைந்து, கட்டிகளாக மாற்றம் பெற்று ஒவ்வாமை எதிர்வினையை உண்டாக்குகிறது.

உச்சந்தலை பருக்களுக்கு காரணமான சில முக்கியமான பாக்டீரியாக்கள்:

* பூஞ்சை தொற்று

* ஸ்டேஃபிளோகோகஸ் எபிடெர்மிடிஸ்

* ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ்

* டெமோடெக்ஸ் ஃபோலிகுலோரம்

உச்சந்தலையில் பருக்கள் ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்:
உச்சந்தலையில் பருக்கள் ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்:
அழுக்கான உச்சந்தலை

கூந்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு முதன்மையான மற்றும் மூலக்காரணமாக இருப்பது அழுக்கு. பருக்களுக்கு இதுவே ஒரு முக்கிய காரணமாக உள்ளது. உச்சந்தலை அழுக்காகவும், பிசுபிசுப்பாகவும் இருக்கும் போது அவை பருக்களை உண்டாக்குகின்றன. உங்கள் தலையில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குடியேறுவதைத் தடுக்க தலைமுடி அழுக்காகாமல் அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உச்சந்தலையில் எண்ணெய் தன்மை அதிகம் கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஹார்மோன் சமச்சீரின்மை

ஹார்மோன் சமச்சீரின்மை, உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு தேவையற்ற மாற்றங்களை உண்டாக்குகிறது. அத்தகைய தேவையற்ற மாற்றத்தில் ஒன்றாக இந்த பருக்களும் இருக்கலாம். முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கும் ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக இருக்கலாம். இந்த நிலையைத் தடுக்க தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்பது நல்ல தீர்வாகும்.

நீர்கட்டிகள்

PCOS என்னும் நீர்கட்டிகள் பெண்கள் உடலில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக கருப்பையில் தோன்றுகின்றன. இது ஆண்ட்ரோஜன் அளவின் அதிகரிப்புக்கு காரணமாகிறது, இதனால் சீபம் உற்பத்தி மற்றும் எண்ணெய் சுரப்பு அதிகரிக்கும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் உச்சந்தலையில் பருக்கள் தோன்றலாம். ஏனென்றால், இந்த மாத்திரைகள் இயற்கையாக ஆண்ட்ரோஜெனிக் தன்மை கொண்டவை.

கூந்தல் வேர்க்கால் அழற்சி

ஃபோலிகுலிடிஸ் என்னும் கூந்தல் வேர்க்கால் அழற்சி என்பது ஒரு தோல் பிரச்சினையாகும், இது பரு போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இவை அரிப்பு மற்றும் சிறிய புள்ளிகளுடன் கொத்துகொத்தாக காணப்படும். பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக இந்த நிலை உண்டாகிறது. ஷாம்பு கொண்டு தலையை அலசுவதுடன் சேர்த்து, தலைமுடியை எக்ஸ்போலியேட் செய்வதால் பாக்டீரியா உச்சந்தலையில் படியாமல் தடுக்கப்படுகிறது.

அழுக்குகள் படிவது

தலையை சுத்தம் செய்வது என்பது வெறும் சுத்தம் செய்வது மட்டுமல்ல. அழுக்குகள் தலையில் படியாதவாறு சுத்தம் செய்ய வேண்டும். உச்சந்தலையில் அழுக்குகள் பருக்கள் மற்றும் கட்டிகளை ஊக்குவிக்கலாம். எனவே கூந்தலை சரியான முறையில் கழுவுவதால் அழுக்குகள் படிவதைத் தடுக்கலாம் என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் வறண்ட ஷாம்பூவை பயன்படுத்துவதால் அவை உச்சந்தலையில் படியக்கூடும் என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.

உச்சந்தலையில் பருக்கள் வராமல் தடுக்க சில குறிப்புகள்:

* துளைகளில் அழுக்குகள் படியாமல் தவிர்ப்பதில் உச்சந்தலையின் சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தலைமுடி எண்ணெய் தன்மையுடன் இருக்கும்போது அல்லது அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில், உங்கள் தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

* ஒவ்வாமை அளிக்காத மூலிகை சேர்த்து தயாரிக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

* ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

* வைட்டமின் ஏ, டி, ஈ போன்ற சத்துகள் அதிகம் உள்ள சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்வது கூந்தல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்றாலும் அளவுக்கு அதிகமாக கூந்தலைக் கழுவுவதால் கூட சில நேரங்களில் உச்சந்தலையில் பருக்கள் உண்டாகலாம். அதுபோன்ற நிகழ்வுகளில், சரியான தீர்வுக்கு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… குறைந்த வயதில் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழ இதான் காரணம்!

nathan

இதை முயன்று பாருங்கள் அரையடிக் கூந்தலோ, இடுப்பைத் தாண்டிய கூந்தலோ…

nathan

கூந்தல் அழகியாக கறிவேப்பிலை!

nathan

இளநரையை மறைய செய்யும் கரிசலாங்கண்ணி தைலம்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டிலேயே உங்கள் கூந்தலை புதுப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!

nathan

பொடுகை விரட்ட வேப்பம்பூ

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமாமுடி உதிர்வு மற்றும் வழுக்கையை பற்றிய சுவாரசிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்..!

nathan