25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
smoking1 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரவில் குழந்தைப் போல தூக்கத்தைப் பெற உதவும் அற்புத பானங்கள்!

மனிதருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், அதனால் பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையான ஒருவரை மனதளவில் மட்டுமின்றி, உடலளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

அமெரிக்காவில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தூக்கமின்மையால் கஷ்டப்படுவதாக ரிபோட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய காரணங்களாகும்.

தூக்கமின்மை பிரச்சனையால் ஒருவர் கஷ்டப்பட்டால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* படுத்தால் தூக்கம் வராமல் கஷ்டப்படுவது

* பகலில் அதிகப்படியான சோர்வு

* பகல் நேரத்தில் நீண்ட நேரம் தூங்குவது

* மனக்கவலை அல்லது மன பதற்றம்

* கவனச்சிதறல்

* மன இறுக்கம்

ஒருவர் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற நினைத்தால், தூங்கும் முன் வெதுவெதுப்பான பானங்களைப் பருக வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிலும் தற்போதைய அவசர உலகில் உடலுக்கு போதுமான ரிலாக்ஸ் கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் இரவில் சரியான தூக்கத்தைப் பெற முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் இரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் சில அற்புத பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

செர்ரி ஜூஸ்

ஒருவர் காலையில் 8 அவுன்ஸூம், இரவு தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 8 அவுன்ஸூம் செர்ரி ஜூஸைக் குடிப்பதால், அது தூக்கமின்மை பிரச்சனையைக் குறைக்கும் என ஒரு சிறிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு செர்ரிப் பழத்தில் உள்ள மெலடோனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஒருவரது உடலில் உள்ள தூக்க சுழற்சியை சீராக்க உதவுவது தான் காரணம்.

லெமன் பாம் டீ

லெமன் பாம் டீ கூட தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு சிறிது லெமன் பாம் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதி விட்டு இறக்கி, தேன் கலந்து இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் உடல் ரிலாக்ஸ் அடைந்து, இரவில் நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். குறிப்பாக நடுத்தர வயதினர் இந்த டீயைக் குடிப்பதால், மன பதற்றம் குறையும்.

வெதுவெதுப்பான பால்

இரவில் தூங்கும் போது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைக் குடிப்பதன் மூலமும் நல்ல தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில் பாலில் உள்ள அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன், மூளையை அமைதியடையச் செய்து, தூக்கத்தைத் தூண்டுமாம். அதிலும் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

சீமைச்சாமந்தி டீ

மருத்துவ குணம் நிறைந்த சீமைச்சாமந்தி டீ ஒருவருக்கு தூக்கத்தை வரவழைப்பதோடு, வயிற்று உப்புசத்தையும் போக்கும். சீமைச்சாமந்தி டீயை தயாரிக்கும் போது, அந்த சீமைச்சாமந்தி தூளை சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

க்ரீன் டீ

உலகில் உள்ள மிகவும் பழமையான டீக்களுள் ஒன்று தான் க்ரீன் டீ. இந்த க்ரீன் டீயில் உள்ள தியனைன், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். க்ரீன் டீயில் பல வகைகள் உள்ளதால், காப்ஃபைன் இல்லாத க்ரீன் டீயைத் தேர்ந்தெடுத்து குடியுங்கள். இல்லாவிட்டால், அன்றைய இரவு உங்களுக்கு சிவராத்திரி ஆகிவிடும்.

வாழைப்பழ ஸ்மூத்தி

வாழைப்பழ ஸ்மூத்தி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் அற்புத பானங்களுள் ஒன்று. இது வயிற்றை நிரப்புவதோடு, மிகவும் சுவையானதும், எளிதில் தயாரிக்கக்கூடியதும் கூட. அதற்கு மிக்ஸியில் நன்கு கனிந்த வாழைப்பழம் ஒன்றைப் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் வெண்ணெய், 1/2 கப் சோயா பால் அல்லது பாதாம் பால் சேர்த்து நன்கு அரைத்து, பின் இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

மால்ட் வகை பவுடர்

மால்ட் வகை பவுடர் பொதுவாக காலை உணவின் போது சாப்பிடக்கூடிய ஒன்று. ஆனால் இதில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், இதை இரவில் தூங்கும் முன் குடிப்பது சிறப்பானதாக இருக்கும். அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், இந்த மால்ட் பவுடரை சேர்த்து கலந்து, தூங்கும் முன் குடித்தால், உடல் மற்றும் மனம் நன்கு ரிலாக்ஸ் ஆகி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

இளநீர்

இளநீர் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் பானம் தான். ஆனால் தூக்கம் என்று வரும் போது, இது நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவியாக இருக்கும். இதில் உள்ள மக்னீசியம், உடலில் வறட்சி ஏற்படாமல் செய்து, இரவு நேரத்தில் ஏற்படும் தாக்கத்தைத் தடுத்து, தூக்கம் கலைவதைத் தடுக்கும். வேண்டுமானால் இளநீர் குடித்து தான் பாருங்களேன்.

புதினா டீ

புதினா டீ, சீமைச்சாமந்தி டீ போன்றே நன்மைகளை வழங்கும். ஆனால் இது சற்று அதிக ப்ளேவர் நிறைந்தது. இதனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, செரிமானம் சீராகும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் மன அழுத்தம் நீங்கி, நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும்.

Related posts

இல்லறம் இனிக்க கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது

nathan

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்

nathan

நாள்பட்ட நெஞ்சு சளியை காணாமல் செய்ய வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஏ.சி. ஒருகணம் யோசி!

nathan

கர்ப்பிணிகள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள்

nathan

பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வெட்டிவேரின் மகத்துவம்

nathan