27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
maxresd 1
சட்னி வகைகள்

கருவேப்பிலை சட்னி- ருசியாக செய்வது எப்படி?

கருவேப்பில்லையானது பல ஆரோக்கியத்தை அளித்தாலும், முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. ஆரோக்கியம் தரக்கூடிய கருவேப்பிலையை சட்னியாக அரைத்து விட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான கருவேப்பிலை சட்னி. அதுவும் 5 நிமிடத்தில் எப்படி அரைப்பது. தெரிந்துகொள்வோம்.

மிக்ஸியில் ஜாரில் கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, கொத்த மல்லித் தழை – 1/2 கைப்பிடி, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தோல் உரித்த பூண்டு பல் – 3, பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், நெல்லிக்காய் அளவு – புளி, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த சட்னியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை

அடுத்ததாக, அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொஞ்சம் கட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான கருவேப்பில்லை சட்னி தயார்.

இப்படியே இந்த சட்னியை தாளிக்காமல் கூட சாப்பிடலாம். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், போட்டு தாளித்து சட்னியில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

கொஞ்சம் இலசாக இருக்கக்கூடிய கருவேப்பிலையை சட்னிக்கு பயன்படுத்த வேண்டும்.

ரொம்பவும் முற்றிய கருவேப்பிலையை சட்னி அரைக்க பயன்படுத்தினால் சட்னியில் கருவேப்பிலையின் வாசனை அதிகமாக வீசும். சுவையில் வித்தியாசம் தெரியும்.

Related posts

சப்பாத்திக்கு சுவையான தக்காளி தால்

nathan

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி

nathan

கடலை சட்னி

nathan

ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி -செய்முறை

nathan

சுவையான வெண்டைக்காய் சட்னி தயார்

nathan

தக்காளி குருமா

nathan

இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாற தக்காளி கார சால்னா…..

sangika

தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் இந்த பீர்க்கங்காய் சட்னி…

sangika

சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்முறை

nathan