26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
jj
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தயிருடன் மறந்தும் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க!

தயிரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி2 வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளன.

 

ஆனால் தயிரை தவறான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது ஆபத்தானது மற்றும் சருமத்தை மோசமாக பாதிக்கும். மோசமான உணவுச் சேர்க்கைகள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஆனால் பலருக்கு தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வெங்காயம் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது மற்றும் தயிர் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இவை சில நேரங்களில் சிலருகிகு சருமத்தில் தடிப்புகள், அரிக்கும் தோலழற்சி அல்லது எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பிற சரும அழற்சிகளை ஏற்படுத்தும்.
  •  மீன்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டுமே புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். எப்போதுமே புரோட்டீன்கள் நிறைந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது, இது அஜீரண கோளாறு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
  •  பால் மற்றும் தயிர் இரண்டுமே விலங்கு வகை புரோட்டீன்கள். எனவே இவை இரண்டையும் ஒன்றாக எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
  • உளுத்தம் பருப்பை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படும்.
  • எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிரை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது செரிமான செயல்பாட்டை மெதுவாக நடைபெறச் செய்யும் மற்றும் நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்க வைக்கும்.
  • மாம்பழத்தையும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது உடலில் வெப்பம் மற்றும் குளிர்ச்சி இரண்டையும் ஒரே வேளையில் உற்பத்தி செய்து சரும பிரச்சனைகள் ஏற்பட வழிவகுப்பதோடு, உடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும்.

 குறிப்பு

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் தயிரில் உள்ள புரோட்டீன் மற்றும் ஆற்றல், உடலில் சளியின் அளவை அதிகரிக்கும்.

Related posts

சுவையான சத்து மாவு கஞ்சி

nathan

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் மஷ்ரூம் ?

nathan

சூப்பர் டிப்ஸ்.. பார்லி தண்ணீர் குடியுங்கள்!

nathan

இவ்வளவு விஷயம் இருக்கா?…ஜவ்வரிசிக்குள்ள…. இத படிங்க!

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி -ஹெல்த் ஸ்பெஷல்

nathan

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உடல்சூட்டை குறைக்கும் நாட்டு வைத்தியம்!சூப்பர் டிப்ஸ்….

nathan

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan