27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Spanish Omelette
அசைவ வகைகள்

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 1 பெரியது
முட்டை – 3
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் உருளைக்கிழங்கையும், பெரிய வெங்காயத்தையும் தனித் தனியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் அடிப்பாகம் அகன்ற கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு கிளறவும். உருளைக்கிழங்கு பாதி வெந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து கிளறவும். அதில் மிளகு தூள் சேர்க்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். உருளைக்கிழங்கு நன்கு பொரிந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி நன்கு பரத்தவும். இதை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். சிவந்து வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவும். நன்கு சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Spanish Omelette

Related posts

கிராமத்து ஸ்டைலில் கம கமக்கும் மீன் குழம்பு…

nathan

அயிரை மீன் குழம்பு

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

கொத்தமல்லி சிக்கன் குருமா

nathan

லாலி பாப் சிக்கன்

nathan

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி

nathan

சிக்கன் பிரட்டல்

nathan