26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 15 150010
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆயுர்வேத இரகசியம்! தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்!

பெண்களுக்கு உற்ற தோழியாக இருக்கிறது வெந்தயம். இந்த வெந்தயம் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலிகளுக்கு மட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் அதிகரிக்கவும் உதவுகிறதாம்.

 

குழந்தை பிறந்த ஆரம்ப காலங்களில் சில பெண்களிடம் குழந்தைக்கு தேவையான அளவு பால் இருக்காது. அந்த நிலைகளில் பெண்களுக்கு பெரும்பாலும் இயற்கை பொருட்களை வைத்து செய்யக்கூடிய சில கை வைத்தியங்கள் தான் பரிந்துரைக்கப்படுகிறது.

அந்த வகையில் வெந்தயம் ஒரு மிகச் சிறந்த வைத்தியம். தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் சாப்பிடலாம் என்பதற்கான சில காரணங்களை இந்த பகுதியில் காணலாம்.

1. பால் பற்றாக்குறை

இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை 6 மாதத்திற்கு முன்னர் கூட நிறுத்திவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. ஆய்வு

பெண்களுக்கு ஏற்படும் இந்த தாய்ப்பால் பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்பது பற்றி செய்த ஆராய்ச்சியில் வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3. வெந்தய பவுடர்

இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டு பெண்களில் வெந்தய பவுடர் கலந்த தே நீரை பருகிய பெண்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

4. வெந்தய தண்ணீர்

வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து, காலையில் அந்த வெந்தய தண்ணீரை குடித்து வந்தால், தாய்ப்பால் அதிகரிக்கும்.

5. வெந்தய தேநீர்

வெந்தயத்தை காய்ச்சிய தண்ணீரில் இட்டு, சிறிது நேரம் கழித்து வெந்தயத்தை வடிகட்டிவிட வேண்டும். இந்த தேநீரை பருகினாலும் தாய்ப்பால் அதிகரிக்கும்.

6. ஸ்நேக்ஸ்

பேக்கரிகள் மற்றும் கடைகளில் வெந்தயம் ஸ்நேக்ஸாக கூட நல்ல சுவையுடன் கிடைக்கிறது. இதனை கூட பெண்கள் சாப்பிடலாம்.

Related posts

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா ? அப்போ யார்மேலையோ தீரா வன்மம் இருக்காம்…!

nathan

பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது!…

sangika

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லதாம்

nathan

தெரிந்துகொள்வோமா? காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

nathan

கை கால் குடைச்சல் வர காரணங்கள் தெரியுமா?

nathan

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி!!!தெரிஞ்சிக்கங்க…

nathan