உங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை நினைவூட்டும் அலாரமாக இருப்பது தான் மூட்டுவலி. எந்த வலியாக இருந்தால் கூட மீண்டு எழுந்து நடந்து விடலாம். ஆனால், நடக்கவே முடியாத அளவு ஏற்படும் மூட்டுவலி தான் நடுவயதை தாண்டும் ஒவ்வொரு நபருக்கும் ஏற்படும் கொடுமையான விஷயம். மற்றவர்களை போல நெடுந்தூரம் பயணிக்க முடியாது, உட்கார்ந்தால் எழுந்திருப்பது கடினம், எழுந்தால் உட்காருவது கடினம். ஆனால், தற்போதைய நாட்களில் உட்கார்ந்தே பணிபுரியும் பல பேருக்கு இந்த மூட்டுவலி வரப்பிரசாதமாய் தரப்படுகிறது.
நல்லது, கெட்டது என எங்கு போய் வரவும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த மூட்டு வலியில் இருந்து குணமடைய நிறைய இயற்கையான வழிகள் இருக்கின்றன. ஆனால், நாம் தான் அதையெல்லாம் பின்பற்ற மாட்டோமே. நமக்கு தெரிந்ததெல்லாம் ஆங்கில மருத்துவத்தின் பயன்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளின் பரிசுகள் மட்டுமே. நீங்கள் உங்களது உடல்திறனை சரியாக வைத்துக் கொண்டாலே பெருமளவு மூட்டு வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் உட்கொள்ளுங்கள் இது உங்கள் எலும்பிற்கு நல்ல வலிமை தரும். சரி, இனி என்ன செய்தால் மூட்டு வலியில் இருந்து எளிதாக குணமடையலாம் என்று தெரிந்துக் கொள்ளலாம்…
கால்சியம்
கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் இது உங்களது எலும்புகளுக்கு நல்ல வலிமை தரும். இதனால், உங்களுக்கு மூட்டு வலி ஏற்படாது பார்த்துக் கொள்ள முடியும்.
பால் உணவுகள்
பால், தயிர், சீஸ், போன்ற உணவுகளை உங்களது அன்றாட உணவு பழக்கத்தில் மறவாது அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள். இது அதிகமாக கால்சியம் சத்து உள்ள உணவுகள். அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம் இதில் கொழுப்புச்சத்தும் அதிகம் இருக்கின்றன.
உடல் பருமன்
உங்கள் உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் மூட்டு வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே உங்களது உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தசையை வலிமையாக்குங்கள்
உங்களது தசை பகுதிகள் வலிமையாக இருந்தால், உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. எனவே தசை பகுதிகளை வலிமையாக வைத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சியை செய்யுங்கள்.
நீச்சல்
ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே அதிகப்படியாக மூட்டு வலி இருக்கிறது எனில், ஜிம்மில் நீங்கள் அதிக எடையை தூக்கி உடற்பயிற்சி செய்வது சரியானதாக இருக்காது. எனவே, நீங்கள் நீச்சல், நடைபயிற்சி போன்றவற்றை பின்பற்றலாம். எதற்கும் உங்களது உடற்பயிற்சி வல்லுனரிடம் கலந்தாலோசித்து இப்பயிற்சிகளில் நீங்கள் ஈடுப்படலாம்.
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
நீங்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்யும் போது உங்கள் தசைகள் நன்கு இலகுவாகிறது மற்றும் வலிமையடைகிறது.
சீரான உடற்பயிற்சி
மருத்துவர்கள் கூறுவது என்னவெனில், உங்களுக்கு மூட்டு வலி வராமல் இருக்க வரும் முன் காக்கும் முயற்சி தான் சரியானது. சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கின்றனர்.