26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
oushouldnevereverignore
மருத்துவ குறிப்பு

இந்த அறிகுறி எல்லா உங்களுக்கு இருக்கா? உடனே டாக்டர பாருங்க!!!

நிறைய பேர் கூறுவதுண்டு, திடீரென எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் போய்விட்டது. எனக்கு எப்படி இந்த பிரச்சனை வந்ததென்று தெரியவில்லை என்றெல்லாம்.

ஆனால், உண்மையில் எந்த உடல்நிலை பிரச்சனை உங்களுக்கு ஏற்பட்டாலும், அதற்கான அறிகுறிகள் உங்களுக்கு முன்பே தோன்றியிருக்கும்.

ஒன்று நீங்கள் அதை பொருட்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாது இருந்திருப்பீர்கள்.

 

பெரும்பாலும் நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அறிகுறிகள், திடீர் உடல் எடை குறைவு, சிறுநீர் நிறம் மாறுதல், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படுதல், குமட்டல் மற்றும் வயிறு சார்ந்த கோளாறுகள் ஆகியவை.

இந்த அறிகுறி எல்லாம் உங்களுக்கு அடிக்கடி ஏற்படுகின்றது என்றால் நீங்கள் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

சரி இதன் மூலமாக நமது உடல்நிலைக்கு என்னெவெல்லாம் ஏற்படலாம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

அதிகப்படியான இரத்தபோக்கு

மாதவிடாய் நாட்கள் கடந்தும் சிலநாட்கள் உங்களுக்கு இரத்தபோக்கு ஏற்படுகிறது என்பது நீங்கள் மிக முக்கியாமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இது ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம் அல்லது கருப்பை புற்றுநோயாகவோ, கருப்பை அகப்படலப் புற்றுநோயாகவோ இருக்கலாம். ஒருவேளை இது சாதாரண தொற்று கிருமிகளின் காரணமாக ஏற்படும் பிரச்சனையாகக் கூட இருக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு அதிகப்படியான இரத்தபோக்கு ஏற்படுவது சகஜம். ஆனால், அதற்கு முன் இவ்வாறு ஏற்பட்டால் கட்டாயம் நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது முக்கியமானது.

திடீர் உடல் எடை குறைவு

நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாமல், உணவு கட்டுப்பாடு ஏதும் எடுத்துக் கொள்ளாத போதும் உங்களது உடல் எடை கணிசமாக குறைந்து வருகிறது என்றால் ஒருவேளை உங்களுக்கு அது பெருங்குடல் புற்றுநோய்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் குறைத்து மதிப்பிடாது உங்கள் உடல்நலத்தின் மீது அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

நிறைய முறை சிறுநீர் கழிப்பது

ஒருநாளுக்கு நீங்கள் இயல்பாக சிறுநீர் கழிப்பதை விட அதிக முறை சிறுநீர் வெளியேற்றம் ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக முக்கியம். இது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும்.

வயிறு வீங்குதல்

அதிகப்படியான உணவோ அல்லது கொழுப்பு நிறைந்த உணவோ நீங்கள் உட்கொள்ளும் போது வயிறு கொஞ்சம் வீங்கியது போல் தெரியும். இது சாதரணமானது. ஆனால், பெண்களுக்கு வயிறு இவ்வாறு எந்த காரணமும் இன்றி வீங்கியது போல இருந்தால் அது கருப்பை புற்றுநோய்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, பெண்கள் இது போல உங்களுக்கு தோன்றினால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

அவ்வப்போது மயக்கம்

சிலருக்கு வாரம் முழுதும் அதிகபடியாக வேலை செய்ததினால் மிகவும் சோர்ந்து காணப்படுவார்கள், மயக்கம் வருவது போல இருக்கும். ஆனால், இப்படி அதிகப்படியான வேலைகள் ஏதும் செய்யாத போதும் கூட அடிக்கடி உடல் சோர்வு, மயக்கம் வருவது போல இருந்தால், இரத்த சோகையினால் ஏற்படும் கருப்பை புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோயாக இருக்கலாம்.

கால் வீக்கம்

என்றும் இல்லாது திடீரென உங்களது கால்கள் மிகவும் வீங்கி தோற்றமளித்தால் நீங்கள் உடனைடியாக மருத்துவரை அணுகவது அவசியம். இது உங்கள் உடலில் இரத்த உறைவு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இது நுரையீரலில் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

வயிற்று பிரச்சனைகள்

பெரும்பாலும் பலவகையான புற்றுநோய்களுக்கு வயிற்று கோளாறுகள் தான் அறிகுறிளாக இருக்கின்றன. அதிலும், கருப்பை, பெருங்குடல், வயிற்று புற்றுநோய்களுக்கு வயிற்று பிரச்சனைகள் தான் முதன்மை அறிகுறிகளாக தோன்றுவதை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்ணுறுப்பு பிரச்சனைகள்

பெண்களுக்கு அவர்களது பெண்ணுறுப்பில் எரிச்சல், அரிப்பு, அல்லது நிறம் மாறி காணப்படுவது பெண்களுக்கு ஏற்படும் வுல்வர் (Vulvar- பிறப்புறுப்பு பகுதியில்) புற்றுநோய்கான அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்ணுறுப்பு ரோஸ் அல்லது பிங்க் நிறத்தில் இருப்பதே ஆரோக்கியமானதாக இருப்பதற்கான நிறம் என கூறுகின்றனர்.

இடுப்பு வலி

சாதாரணமாகவே பெண்களுக்கு அவர்களது மாதவிடாய் காலத்தில் இடுப்பு வலி ஏற்படும். அதை தவிர்த்து மற்ற நாட்களில் அதிகமாக இடுப்பு வலி எற்பட்டால் அது கருப்பை அகப்படலாம் அல்லது குழலுருப்பு அழற்சிகள் மற்றும் பிரச்சனைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

இங்கு கூறப்பட்ட அனைத்தும் உங்களுக்கு ஏற்படும் சாதாரண பிரச்சனைகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் இது மேற்கூறப்பட்ட அபாய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்கள் உடல்நலத்தின் மீது நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

Related posts

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் அரிய வைத்திய முறைகள்?

nathan

உங்களுக்கு அடிக்கடி இங்க வலிக்குதா? கண்டிப்பாக வாசியுங்க….

nathan

வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள்!!!

nathan

ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க… இதைச் செய்யுங்கள்!

nathan

புகைப்பழக்கத்திற்கு அடிமையா….?

nathan

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan

இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்

nathan

லவ்வர் கூட சண்டையா? இந்த 7 விதிகள் உங்களைக் காப்பாத்தும்!

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சருக்கான அறிகுறிகள்!!!

nathan