24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
seafoods crab
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமாநண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உங்களுக்கு வாரந்தோறும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இந்த வாரம் சற்று வித்தியாசமாக நண்டு செய்து சுவைத்துப் பாருங்கள். ஏனெனில் நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

அதிலும் நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இத்தகைய நண்டை டயட்டில் இருப்போர் சேர்த்துக் கொள்வது நல்லது. இங்கு நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

இரத்த சோகையை தடுக்கும்

நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

முடக்கு வாதம்

செலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது தெரியுமா? செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.

வளர்ச்சியை அதிகரிக்கும்

நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

வலிமையான எலும்புகள்

காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

முகப்பருக்கள்

பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால்

நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளுது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.

இரத்த அழுத்தம்

மக்னீசியம் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. இத்தகையது நண்டில் உள்ளது. இதனால் நரம்புகள் தளர்ந்து, இரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும்.

கர்ப்பம்

கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.

இதய நோய்கள்

நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

Related posts

அவசியம் படிக்க..இவர்கள் மட்டும் கிரீன் டீ குடித்தால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

தயிரின் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan

உங்களுக்கு தெரியுமா உருளைக்கிழங்கு கெட்டுப்போகாமல் பாதுகாப்பது எப்படி?

nathan