22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
th
ஆரோக்கிய உணவு

கெட்ட கொழுப்புகளை அடித்து விரட்டும் வாழைத்தண்டுப் பச்சடி

சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.

இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

தேவையான பொருட்கள்

நார் நீக்கி பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.

அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும். சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

Related posts

புரதச்சத்து நிறைந்த 5 உணவுகள்!

nathan

பால் குடித்த பின்பு இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா மாட்டுப்பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது

nathan

மூளை வளர்ச்சியை அதிகரிக்க மீன் சாப்பிடுவது சரியான வழி

nathan

தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

nathan

உடல் வெப்பம் குறைக்கும் உணவுகள் – body heat reduce foods in tamil

nathan

மலச்சிக்கலை போக்கும் கொய்யா சூப்பர் டிப்ஸ்….

nathan

பாத்தா ஷாக் ஆவீங்க வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா?

nathan