நான்ஸ்டிக் தவாவைப் பயன்படுத்த ஆரம்பியுங்க
நாளொன்றுக்குபத்து தம்ளர் தண்ணீராவது குடிங்க. தண்ணீர் உடல் ஆரோக்யத்துக்கு நல்லது, அதே சமயம் தண்ணீர் குடிச்சா நிறைய சாப்பாடு சாப்பிடவும் முடியாது.
எண்ணெயில் வறுத்த,பொரித்த உணவுகளைக் தொட்டுக்கூட பார்க்காதீங்க.
இனிப்புசுவை சேர வேண்டும என்று விரும்பினால் சாப்பாட்டுடன் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள்.
பச்சைக் காய்கறிகள், கீரைவகைகள், நாாச்சத்துள்ள உணவுவகைகளை நிறைய சாப்பிடுங்க.
பழவகைகளை மாற்றி மாற்றிச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சிக்கன் சாப்பிட ஆசையென்றால், அதன்மேல் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் சுமார் நூறுகிராம் கலோரிகள் உடலில் சேராமல் பாதுகாக்கலாம்!
நாளைக்கு ஒரு முறை மட்டும் முழு சாப்பாடு சாப்பிட்டு அடுத்த வேளைகளில் பழங்கள், ஷூஸ் என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
30லிருந்து 40 நிமிடங்கள் வரை ஏதாவது எக்ஸர்ஸைஸ் செய்யுங்கள்!
காரில் செல்லும் பழக்கம் உள்ளவர்களே என்றாலும்கூட, இறங்குமிடத்திற்கு சற்று தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு செல்லுமிடத்திற்கு நடந்தே செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுடன் தினம் தினம் ஓடியாடி விளையாடுங்கள்.
உட்கார்ந்து பார்க்கும் வேலைகளையோ,அல்லது விளையாட்டுக்களையோ தவிர்த்திடுங்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, தின்பண்டங்களைக் கொறிப்பது கூடவே கூடாது.
மேற்கண்டவை எளிமையான மிகச் சாதாரணமான வழிமுறைகளாக இருந்தாலும் விடாமல் செய்யாமல் கடைபிடித்து வாருங்கள். உங்கள் எடை கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டுச் செல்வதை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள்!