தினமும் அளவான பாதாமை உணவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்ச்சிக்கு முன்னர் பாதாம் கஞ்சி தயாரித்து குடிக்கலாம்.
பாதாம் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
4 பேருக்கு தேவைப்படும் கஞ்சி
தேவை புழுங்கல் அரிசி- கால் கப்
பாதாம் பருப்பு- 10
பால்- 2 தம்ளர்
ஏலக்காய்- கால் டீஸ்பூன்
சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை- இனிப்புக்கேற்ப
செய்முறை
முன் தினம் இரவு புழுங்கல் அரிசியை சுத்தம் செய்து ஊறவிடவும்.
பாதாம் பருப்பையும் தனியாக ஊறவைக்கவும்.மறுநாள் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பிறகு பாதாம்பருப்பை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து வைத்து கொள்ளவும்.
இரண்டு தம்ளர் நீர்விட்டு கொதிக்கவைத்து அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும். கால் மணி நேரம் கழித்து பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
அடுப்பு மிதமானத்தீயில் இருக்க வேண்டும். இந்த சத்து மிக்க பாதாம் கஞ்சியை அனைவருமே காலை உணவுக்கு பதிலாக எடுத்துகொண்டாலே போதும்.