28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
Sundal Mani kozhukattai SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான கொழுக்கட்டை சுண்டல்

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்

தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

அதில் 1 சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.

மாவு நன்றாக வெந்தவுடன் மூடி போட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

இந்த உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். பின்பு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியாக வேகவைத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

சூடான கொழுக்கட்டை சுண்டல் தயார்.

Courtesy: MalaiMalar

Related posts

உணவு நல்லது வேண்டும்!

nathan

மிளகு, டீ தூளில் உள்ள கலப்படத்தை கண்டறிய வழிகள்

nathan

கைக் குலுக்குறது கூட குத்தமா…??? கை எடுத்து கும்பிடுங்க அது தான் சரி!!!

nathan

எவ்வளோ சாப்பிட்டாலும் பசிச்சுக்கிட்டே இரு tamil healthy food

nathan

தினசரி 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

nathan

தெரிஞ்சிக்கங்க…அன்னாசிப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

தெரிஞ்சிக்கங்க… அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்….!!

nathan

ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு

nathan