22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
amitabh bachchan 158
ஆரோக்கியம் குறிப்புகள்

மும்பையில் அமிதாப் பச்சனின் மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்த ஸ்டேட் பாங்க்…

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் சொந்தமான கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக வாடகைக்கு எடுத்துள்ளது.

மும்பையில் ஜுஹு பகுதி மிகவும் காஸ்ட்லியான ரியல் எஸ்டேட் பகுதியாக உள்லது. இப்பகுதியில் ஒரு வீடு அல்லது கட்டிடத்தை வாங்குவதைக் காட்டிலும் வாடகைக்கு இடம் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமானது.

இதனிடையே, அபிதாப் பச்சன் தனக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டு பெரும் தொகையைச் சம்பாதிக்க உள்ளார்.

இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அமிதாப் பச்சன் மற்றும் அவரது ஓரே மகனான அபிஷேக் பச்சன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் படி ஜுஹு பகுதியில் ஜல்சா கட்டிடத்தின் அருகில் இருக்கும் 3,150 சதுரடி அளவிலான வர்த்தகக் கட்டிடத்தின் தரை தளம் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்திற்கு மட்டுமே சுமார் 15 வருட வாடகை ஒப்பந்தம் படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மாதம் 18.9 லட்சம் ரூபாயை ஒவ்வொரு மாதத்திற்கும் வாடகையாக அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 25 சதவீத உயர்வு அளிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி கட்டிடத்தின் டெபாசிட் தொகையாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு சுமார் 2.26 கோடி ரூபாய் அளிப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 28ஆம் தேதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன் இந்த கட்டிடத்தில் சிட்டி பேங்க் இருந்துள்ளது சிட்டி வங்கி இந்தியாவில் தற்போது வர்த்தகத்தை மூடும் காரணத்தால் இந்த இடம் காலி செய்யப்பட்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு வழங்கப்படுகிறது.

Related posts

வீட்டுக்குறிப்புகள்!

nathan

அதிர்ச்சி சம்பவம் பாவாடை கட்டினால் புற்று நோயா.? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!

nathan

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா? இந்த இயற்கை பொருட்களை தினமும் தடவுங்க…

nathan

வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்

nathan

சுவையான … ரசகுல்லா

nathan

பெண்களே! ‘இந்த’ விஷயங்கள மட்டும் தப்பி தவறிக்கூட உங்க கணவனிடம் சொல்லாதீர்கள்…

nathan

A முதல் எழுத்தாக இருப்பவரின் குணங்கள், மற்றும் எதிர்காலம்..

nathan

காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்

nathan