கர்ப்பம் 24 வாரத்திற்கு முன்னராக உண்டாகும் பிரசவம் கருச்சிதைவு என்றழைக்கப்படுகிறது. ஐந்தில் ஒரு பிரசவம் இவ்வாறு தான் நடைபெறுகிறது. கருச்சிதைவிற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை என்றாலும் கருச்சிதைவை சில வழிமுறைகள் மூலம் தடுக்கலாம். கருச்சிதைவு உண்டாகப்போகிறது என முன் கூட்டியே தெரிந்து கொள்வது கருச்சிதைவுக்கு சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும்.
முதல் மூன்று மாதங்கள்:
இது முதல் மூன்று மாதங்களுக்குள் ஏற்படுகின்றது என்றால் அது கர்ப்பம் அல்லது குரோமோசோம்களின் வழக்கமற்ற செயல்பாடுகளால் உண்டாகின்றது.
14 முதல் 26 வாரங்கள்:
இந்த 14 முதல் 26 வார காலங்களில் கருச்சிதைவு ஏற்பட்டால், இது ஒருவேளை ஏதேனும் தொற்றுக்கள், நீண்ட கால ஆரோக்கிய குறைபாடு, புட் பாய்ஷனிங் ஆகியவை காரணமாக இருக்கலாம். நூறில் ஒரு பெண்ணுக்கு இது போன்ற கருச்சிதைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஹார்மோன் பரிசோதனை
எட்டு வாரங்களுக்கு பிறகு ஸ்கேன் செய்யும் போது ஹார்மோன் விகிதம் நன்றாக இருந்தால், அவர்களது பிரசவம் நல்ல முறையில் நடக்க 86 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. ஹார்மோன்கள் குறைவாக உள்ளவர்களுக்கு இரண்டு சதவீதம் வாய்ப்புகள் குறைகின்றன.
மன நலம்
கருச்சிதைவு உண்டாவதற்கு மன வருத்தம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நீண்ட நாள் மனவருத்தம், மனஅழுத்தம் ஆகியவை கர்ப்ப காலத்தில் கூடவே கூடாது. இது தாயையும் குழந்தையையும் மிக அதிகமாக பாதிக்கிறது. தாயின் மனநிலை குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறக்க கூடாது.
தீர்வு என்ன?
கருச்சிதைவு ஆபத்துகள் உள்ளவர்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். மனநல மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் மற்றும் நேர்மறையான எண்ணங்களை அதிகரிப்பதன் மூலம் கருச்சிதைவு ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்பதை மறக்க வேண்டாம்.