23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
carrot
அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா உணவில் கேரட்டை அவசியம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கேரட்… கேரட்… கேரட்… கேரட்டில் அத்தனை உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய உடல் ஆரோக்கிய பொருட்கள் அடங்கியுள்ளது. கேரட்டில் உள்ள உடல் நல பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் கண்டிப்பாக அதனை உங்கள் உணவில் சேர்த்திட மறக்க மாட்டீர்கள். ஏபியசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் தான் கேரட். கிரேக்க வார்த்தையான “கேரட்டான்” என்ற வார்த்தையில் இருந்து உருவானது தான் கேரட்.

அமெரிக்க வேளாண்மை துறையின் படி, ஒரு முறை பரிமாறப்படும் அளவு என்பது மிதமான அளவிலான 1 கேரட் அல்லது நறுக்கிய ½ கேரட் ஆகும். இந்த அளவிலான கேரட்டில் 25 கலோரிகள், 6 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 3 கிராம் சர்க்கரை மற்றும் 1 கிராம் புரதம் அடங்கியுள்ளது.

கேரட்டில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, வைட்டமின் கே, பொட்டாசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், மக்னீசியம், ஃபோலேட், மாங்கனீஸ், வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் அடங்கியுள்ளது. கேரட்டை இன்னும் சிறப்புக்குள்ளாக்குவது மற்றுமொரு பொருள். அது தான் பீட்டா-கரோடின் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட். இது தான் கேரட்டிற்கு அடர்ந்த ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது.

சரி, கேரட்டில் வாய் வலிக்க கூறும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதைப் பார்த்தோம். ஊட்டச்சத்துக்களே இவ்வளவு என்றால் அதனால் கிடைக்கும் உடல் நல பயன்கள் எவ்வளவு இருக்கும்? வாங்க, அதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை குறைப்பு

கேரட்டில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாகவும், பச்சையாக இருக்கும் போது கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதனால் சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை கேரட்டை நொறுக்குத்தீனிகளாக நேரம் கிடைக்கும் போது உண்ணுங்கள்.

சுத்தமான பற்கள்

மொறுமொறுவென இருப்பதால் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான பற்களை பெறுவதற்கு கேரட் சிறந்த தேர்வாக இருக்கும்.

சரும வெண்மை

கேரட் ஜூஸ் குடிப்பதால் உங்கள் சருமம் வெண்மையடையும். மேலும் ஆரோக்கியமான சருமத்தையும் பெறலாம்.

கண்களின் ஆரோக்கியம்

கண்களின் ஆரோக்கியத்திற்கு கேரட்டை விட சிறந்தது வேற எதுவுமாக இருக்க முடியாது. இதற்கு கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

கேரட்டில் பீட்டா-கரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், அவை உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தை அளிக்கும். சுருக்கங்கள் உருவாகாமல் தடுப்பதும் கூட கேரட்டால் கிடைக்கும் மற்றொரு உடல் நல பயனாகும்.

இரத்த அமில சமநிலை

உங்கள் இரத்தத்தை தூய்மைப்படுத்தவும், இரத்த அமிலங்களை சமநிலைப்படுத்தவும் கேரட் உதவுகிறது. அதற்கு காரணம் கேரட்டில் உள்ள வளமையான ஆல்கலைன்.

வயதாவதைத் தவிர்த்தல்

கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், உங்கள் சருமம் மென்மையாகவும் நீட்சி தன்மையுடனும் விளங்கும். இதனால் சருமத்திற்கு வயதாவது குறையும்.

சீழ் பிடிப்பைக் கட்டுப்படுத்தும்

கிருமி நாசினி குணத்திற்கு கேரட் புகழ் பெற்றதாகும். இதனால் சீழ் பிடிப்பை கட்டுப்படுத்த இது உதவும்.

தமனித் தடிப்புக்கு எதிராக போராடும்

கேரட்டில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் நல்ல இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தும்

தமனித் தடிப்பை கேரட் தடுப்பதால், உயர் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் கேரட் உதவுகிறது.

கார்சினோஜென் எதிர்ப்பி

கேரட்டில் ஃபால்கரினோல் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அறிகுறியை ஏற்படுத்தும் அணுக்களை நீக்க உதவும்.

எலும்பு ஆரோக்கியம்

கேரட்டில் கால்சியம் வளமையாக உள்ளதால் உங்கள் எலும்பை வலுப்படுத்த இது உதவிடும். தசைநார் வளர்ச்சியிலும் இது உதவிடும்.

இதய குழலிய ஆரோக்கியம்

கேரட்டில் ஃஆல்பா-கரோட்டீன், பீட்டா-கரோட்டீன் மற்றும் லூடீன் உள்ளதால், அவை உங்கள் இதயத்தை காத்திட உதவும்.

தொண்டைப் புண்ணை ஆற உதவும்

தொண்டைப் புண் மற்றும் அடைசல் ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிக்க கேரட் ஜூஸ் மிகவும் உதவும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது நல்லதாகும்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள் இன்சுலின் எதிர்ப்புக்கு உதவிடும். இதனால் இரத்தத்தில் ஆரோக்கியமான க்ளுகோஸ் அளவு பராமரிக்கப்படும்.

நச்சு நீக்கம்

கேரட் ஜூஸில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளதால், உடலில் உள்ள நச்சுகளை நீக்க இது மிக உதவியாக இருக்கும்.

செரிமானத்திற்கு நல்லது

கேரட்டில் உள்ள நார்ச்சத்து மலங்கழித்தலை சீராக புரிய வைக்கும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும்.

இரவு பார்வையை மேம்படுத்தும்

கேரட் கண் பார்வைக்கு ரொம்பவும் நல்லது. ரோடோப்சின் உதவியோடு இரவு பார்வையையும் அது மேம்படுத்த உதவும்.

கருவுறும் தன்மை ஊக்குவிக்கி

கேரட்டை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், ஆண் மற்றும் பெண் என இருவரின் கருவுறும் தன்மையை அது மேம்படுத்த உதவும்.

முடி உதிர்தலைத் தடுக்கும்

கேரட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் முடி உதிர்தல் தடுக்கபப்டும்.

அழற்சி எதிர்ப்பி

பொடியாக நறுக்கிய கேரட்டை உங்கள் தினசரி உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால், அழற்சி எதிர்ப்பியாக அது மிகவும் சிறப்பாக செயல்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கி

கேரட்டில் வைட்டமின் சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஏஜென்ட்கள் உள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மார்பக பாலை அதிகரிக்கும்

கேரட்டில் காலக்டாகோக் இருப்பதால் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க அது உதவிடும்.

கர்ப்ப காலத்தில் நல்லது

கேரட்டில் வைட்டமின்களும் கனிமங்களும் நிறைந்திருப்பதால், கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நல்லதாகும்.

பருக்களை எதிர்த்துப் போராடும்

கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கரோடினாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் வளமையாக உள்ளதால், அதனை சீராக பயன்படுத்தி வந்தால், பருக்கள் வருவது தடுக்கப்படும்.

Related posts

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan

வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும் உருளை அழகு குறிப்புகள்..

nathan

இதை நீங்களே பாருங்க.! ப்ரியா அட்லியும் பேபியும்: புகைப்படம்!

nathan

தெறி பேபி! மீனா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ..!!!

nathan

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

sangika

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

sangika

வெளியே வந்த அடுத்த நாளே ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா! யாருடன் தெரியுமா?

nathan

கண்சொர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ் இங்கே பார்க்கலாம் வாங்க..

sangika

ரிஷப் பந்த் பிறந்தநாளுக்கு நடிகை ஊர்வசி என்ன செய்தார் தெரியுமா?

nathan