25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
66396891
தலைமுடி சிகிச்சை

தலை முடி கொட்டுவது ஏன்? கூந்தலை வளர்ப்பது எப்படி?

முடி கொட்டுதல் ஏன்?.

1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.
2. அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
3. எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)
என்ணெய் பதார்த்தங்கள்(oily food)
புளிப்பு உணவுகள் (acidic food )
இவைகளை அடிக்கடி அதிக அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.
4. அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடிகொட்டுதல் உண்டாகும்.
5. உடம்பில் இரத்தம் குறைந்து உண்டாகும் இரத்த சோகை (anemia) நோயினாலும் உடம்பில் காணும் பொதுவான பலஹீனத்தாலும் (general debility), மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற காரணங்களினாலும் தலைமுடி சார்ந்த குறைகள் உண்டாகும்.
6. டைபாய்டு காய்ச்சல் மிக முற்றிய நிலையிலும், பொடுகு மற்றும் பேன் அதிகரித்த நிலையிலும் ஹார்மோன் பற்றாக்குறை (hormonal imbalance) நிலையிலும் முடிக் கொட்டுதல் உண்டாகும் .
7. அடிக்கடி ரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் சோப்புகளை உபயோகிப்பதாலும் முடிக்கொட்டுதல், முடி வெடித்தல், முடி செம்பட்டையாதல் ஆகியன உண்டாகலாம்.

கூந்தல் வளர்ச்சியில் அரோமா எண்ணெய்கள்:

1. ரோஸ்மேரி எண்ணெய் (rosemarry oil ): 100 கிராம் தேங்காய் எண்ணெயைக் கலந்து தினசரி தலைக்கு தேய்த்துவர முடி அடர்த்தியாக வளரும்.
2. காஸ்டஸ் எண்ணெய் (costous oil ) : 100 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 5 துளி காஸ்டஸ் என்ணெய் கலந்து, தினசரி தலைக்குத் தேய்த்துவர-பொடுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாய் வளரும் .

3. ஜூனிஃபர் பெரி (junifer berry) -5 சொட்டு
எலாங் எலாங்(yalang yalang) -7 சொட்டு
நல்லெண்ணெய் -100 மி.லி
ஆமணக்கு எண்ணெய் -10மி.லி

இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசி மசாஜ் செய்ய வேண்டும் . மசாஜ் செய்து 6 மணி நேரம் கழித்து குளிக்க, முடி உதிரல் குறைபாடு உடனே நீங்கும்.

4. லாவண்டர் எண்ணெய்(lavener oil ) -5 சொட்டுகள்
லெமன் எண்ணெய் (lemon oil ) -10 சொட்டுகள்
ரோஸ்மேரி எண்ணெய்(rosemerry oil) -10 சொட்டுகள்
டீடிரி எண்ணெய்(tea tree oil ) -10சொட்டுகள்
தேங்காய் எண்ணெய் -100மி.லி

இவைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தேய்த்துவர அடர்த்தியுடன் கருமையாய் முடி வளரும்.

5. ஸ்பெக்நாட் எண்ணெய்(spicknade oil) -8சொட்டுகள்
டீ டிரி எண்ணெய் (tea tree oil) -8சொட்டுகள்
லெமன் கிராஸ் எண்ணெய்(lemongrass oil ) -8 சொட்டுகள்
லெமன் எண்ணெய்(lemon oil) -8சொட்டுகள்
சிடார்வுட் எண்ணெய்(cidarwood oil ) -8சொட்டுகள்
நல்லெண்ணெய் -20 மில்லி

இவைகளைக் கலந்து வாரம் இருமுறை மசாஜ் செய்து குளித்து வர, தீராத பொடுகும் தூர ஓடும்.

கூந்தல் மசாஜ் செய்ய சில எண்ணெய்கள்:
1. தேங்காய் எண்ணெய்
2. ஆமணக்கு எண்ணெய்
3. கருஞ்சீரக எண்ணெய்
4. ஆலிவ் எண்ணெய்
5. நெல்லிக்காய் எண்ணெய்
6. செம்பருத்தி எண்ணெய்
7. கரிசலாங்கண்ணி எண்ணெய்
8. பொன்னாங்கண்ணி எண்ணெய்
9. கற்றாழை எண்ணெய்
10. சவுரிப்பழ தைலம்

மேற்படி எண்ணையை கிண்ணத்தில் தேவையான அளவில் எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, கிண்ணத்தில் நீரில் அமிழ்த்தி எண்ணையை சூடு செய்து உபயோகிக்க வேண்டும்.
66396891
தலைமுடி தாராளமாய் வளர சில குறிப்புகள்

1. சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.
6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.
7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும் .
8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.
9. தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும் . இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.
10. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள் . இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.
11. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள் . அடிக்கடி பயன்படுத்திவர ,முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும் .
12. 1 ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.
13. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும் .
14. வேப்பிலையை தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையைக் கழுவி வர முடி வளர்ச்சி அடர்த்தியாகும்.
15. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.
16. முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo) உபயோகியுங்கள்.
17. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.
18. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.
19. மஹா பிருங்கராஜ தைலம்’ அல்லது ‘நெல்லிக்காய் தைலம் இவைகளைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்திட, முடி தாராளமாக வளரும்.
20. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
21. தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.
22. கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.
23. கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.
24. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
25. பெருஞ்சீரகத்தை(சோம்பு) விழுதாய் அரைத்து, வாரம் மூன்றுமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாய் வளரும்.

Related posts

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!

nathan

சூப்பர் டிப்ஸ் பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

nathan

உங்களுக்கு ஏன் முடி வளர மாட்டீங்குதுன்னு தெரியுமா?

nathan

வேகமாக முடி வளரனுமா? முடி உதிர்தல் பிரச்சனையா? வாரம் ஒரு முறை இதை பயன்படுத்துங்க

nathan

ஷாம்புவா? இல்லை கண்டிஷனரா? எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?

nathan

கூந்தல் வறட்சியை தடுக்கும் விளக்கெண்ணெய்

nathan

முடி உதிர்கின்றதா ? வருத்தம் வேண்டாம்! உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகள் !

nathan

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா?

nathan

கூந்தல் பிரச்சனைகளை போக்கும் தேக்கு விதை எண்ணெய்

nathan