தலைமுடி சிகிச்சை

‘இந்த’ கீரையில் செய்த ஹேர் மாஸ்க்கை யூஸ் பண்ணுனீங்கனா?தலைமுடி கருகருனு நீளமா வளருமாம்!

ஆண், பெண் என அனைவரும் அழகான பளபளப்பான தலைமுடியை பெற விரும்புகிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதிலும் நீளமான அல்லது அடர்த்தியான கூந்தலுடைய பெண்களை காணும் போது, நாமும் இது போன்ற கூந்தலை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண், பெண் இருவரின் அழகை அதிகரிப்பதில் அவர்களின் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் ஸ்பில்ட் எண்ட்ஸ் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இப்போது,​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடி மேலும் வலுவிழந்து போகும். இயற்கை தயாரிப்புகளை பயன்படுத்தும்போது, உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இருக்காது. ஆதலால், ஒவ்வொருவரும் தலைமுடி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பச்சை இல்லை கீரை உங்கள் தலைமுடிக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

காலே

கூந்தலின் வெளிப்புற தோற்றத்தை பராமரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல கூந்தலின் உட்புற ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் காலே மற்றும் அதன் சாறு, தலைமுடி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும். இது கேல் என்றும் அழைக்கப்படுகிறது. தலைமுடி பராமரிப்பு முறைக்கு கேல் சாறு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை இங்கே காணலாம்.

வறண்ட கூந்தலை தடுக்கிறது

காலேவில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது மற்றும் முடி உதிர்தலை தடுக்கிறது. மேலும், இது வறண்ட கூந்தலைத் தடுக்கிறது மற்றும் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவும்

காலேவில் காணப்படும் வைட்டமின் சி உடலில் முடி மற்றும் நகங்களை உருவாக்கும் புரதமான கெரட்டின் உற்பத்திக்கு அவசியம் ஆகும். இது உங்களுக்கு நீளமான முடியை வளர்க்க உதவும். இந்த கெரட்டின் உங்கள் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

முடிக்கு காலேவின் பயன்கள்

வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே தவிர, காலேவில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே, காலே சாற்றை உச்சந்தலையில் மேற்பூச்சாகப் பயன்படுத்தினால், அது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உச்சந்தலையில் நீரேற்றமாக வைத்திருக்கவும் மற்றும் நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. மேலும், இது உலர்ந்த திட்டுகள் மற்றும் எரிச்சல் போன்றவற்றை முற்றிலுமா தவிர்க்கிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

முடி உதிர்தலை தடுக்கிறது

காலேவில் உள்ள வைட்டமின்கள் உச்சந்தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, இது முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை திறம்பட மேம்படுத்துகிறது. இந்த பண்புகள் காரணமாக, மேற்பூச்சு காலே சாறு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதன் மூலம் முடி உதிர்தலுக்கு எதிராகவும் சுற்றுச்சூழலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் பாதுகாக்கலாம்.

காலே மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்

காலே மற்றும் வாழைப்பழம் என இரண்டிலும் அதிக பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன, இது முடியை வலுப்படுத்தும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களை முடியின் வேர்களுக்கு வழங்குகிறது. இந்த கலவையானது இறுதியில் முடிக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

தேவையான பொருட்கள்

ஒரு வாழைப்பழம்
1/2 கப் தூய காலே சாறு
ஒரு ஷவர் கேப்
செய்முறை:

ஒரு வாழைப்பழத்தை 1/2 கப் தூய காலே சாறுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்யவும். பின்னர், உங்கள் தலையை ஹீட் கேப் அல்லது ஷவர் கேப் மூலம் மூடி வைக்கவும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button